இந்தியாவின் நாட்டின் முதல் பெண் நீதிபதி யார்?
வணக்கம் நண்பர்களே இன்றைய பொது அறிவு சார்ந்த பகுதியில் இந்தியாவின் முதல் பெண் நீதிபதி யார் என்று தெரிந்துகொள்ளலாம். பொது அறிவு சம்பந்தமான கேள்விகள் பள்ளி பயிலும் மாணவர்கள் முதல் போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எங்களுடைய பொதுநலம்.காம் பதிவில் தினம்தோறும் பொது அறிவு சார்ந்த வினா விடைகளை அப்டேட் செய்து வருகிறோம். அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். வாங்க இந்தியாவின் முதல் பெண் நீதிபதி யார் என்று தெரிஞ்சிக்கலாம்.
இந்தியாவின் முதல் பெண்மணிகள் |
இந்தியாவின் முதல் பெண் நீதிபதி யார்?:
விடை: இந்திய நாட்டின் முதல் பெண் நீதிபதி அன்னா சாண்டி அவர்கள்.
முதல் பெண் நீதிபதி பற்றி சிறு குறிப்பு:
1905-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் அன்னா சாண்டி என்பவர் பிறந்துள்ளார். இவர் கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர். திருவாங்கூர் சமஸ்தானத்தின் துவக்க கால பெண் பட்டதாரிகளில் ஒருவராவார்.
1930-ல் வழக்கறிஞராக பதிவு செய்த அன்னா சாண்டி கேரள மாநிலத்தின் முதல் பெண் வக்கீலாக பெயர் பெற்றவர். நீதிமன்றத்தில் வழக்காடுவதில் சிறந்தவர் என்று பெயர் பெற்றார்.
1938-ஆம் ஆண்டு நீதித்துறையில் நியமனம் பெற்று “இந்தியாவின் முதல் பெண் நீதிபதி” என்ற பெருமையும் பெற்றுள்ளார். அடுத்த பத்து ஆண்டுகளில் செஷன்ஸ் நீதிபதியாக பதவி ஏற்றார்.
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்? |
1959-ஆம் ஆண்டு கேரளாவின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி ஏற்றார். ஆண்கள் மட்டுமே படிக்கும் சட்ட கல்லூரியில் ஆண்களோடு அமர்ந்து முதல் முதலாக சட்டம் படித்த ஒரே பெண் அன்னா சாண்டி அவர்கள் தான். கேரள மாநிலத்தில் சட்ட படிப்பில் முதல் பட்டம் பெற்ற முத்த பெண்மணி என்ற பெருமை இவரை சேர்ந்தது.
நீதிமன்றத்தில் ஒரே பெண் வழக்கறிஞராக துணிந்து களம் இறங்கியவர். கிரிமினல் வழக்குகளில் கவனம் செலுத்தி வழக்கறிஞர்களின் பட்டியலில் ஐவரும் இடம் பெற்றவர். திருவனந்தபுர அரசாங்கத்தில் 1937-ல் திவானாக பதவி வகித்த சர்.சி.பி ராமசாமி ஐயரால் மாவட்ட நீதிபதியாக அன்னா சாண்டி நியமிக்கப்பட்டார்.
இந்தியாவில் இருக்கும் மாவட்டங்களில் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட முதல் பெண் நீதிபதி இவர்தான். உலகளவில் உள்ள நீதிமன்றங்களில் நீதிபதி தகுதியை அடைந்த பெண்மணிகளில் அன்னா சாண்டி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். 1959-ல் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் நியமனம் செய்யப்பட்டு பெண் வழக்கறிஞர்களுக்கு இன்றும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அன்னா சாண்டி விளங்குகிறார்.
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார்? |
இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் யார்? |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |