கணினியை கண்டுபிடித்தவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா..?

Kanini Kandupidithavar Yaar in Tamil

கணினி கண்டுபிடித்தவர் யார்..? | Kanini Kandupidithavar Yaar in Tamil..!

வணக்கம் நண்பர்களே… தினமும் இந்த பதிவின் மூலம் எதாவதொரு  பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் பயன்படுத்தி வரும் கணினியை கண்டுபிடித்தவர்  யார் என்றும் அவரின் வாழ்க்கை வரலாற்றை பற்றியும் இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம்.

கணினி கண்டுபிடித்தவர் யார்..?

இன்றைய காலகட்டத்தில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை தெரிந்து கொள்வது என்பது அவசியமாகி விட்டது. கணினி இல்லை என்றால் உலகமே இயங்காது என்ற காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். இவ்வளவு சிறப்பம்சம் நிறைந்த கணினியை கண்டுபிடித்தவர் தான் சார்லஸ் பாபேஜ். இவர் 1834 ஆம் ஆண்டு Analytical Engine என்ற முதல் கணினியை கண்டு பிடித்தார்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ரயிலை கண்டுபிடித்தவர் யார் 

சார்லஸ் பாபேஜ் வாழ்க்கை வரலாறு:

இவர் தான் கணினியை முதன் முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். சார்லஸ் பாபேஜ் கணினியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இவர் 1791 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி லண்டனில் வாழ்ந்து வந்த பெஞ்சமின் பாபேஜ் மற்றும் பிளம்லீ டீப் என்ற தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். இவரின் தந்தை லண்டனில் வங்கியாளர் மற்றும் வணிகராக பணியாற்றி வந்தார்.

சார்லஸ் பாபேஜ் இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்றார். இவர் கணிதத்தில் அதிகம் நாட்டம் கொண்டவராக இருந்தார். பல்கலைக்கழகத்தில் இணைந்த இவர் கணிதத்தில் இவருடைய திறமைகளை வெளிப்படுத்தினார். அவருடைய ஆசிரியரை விட கணிதத்தை பற்றி அதிகம் அறிந்திருந்தார்.

இதையும் பாருங்கள் ⇒ பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா? 

சார்லஸ் பாபேஜ் 1814 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் பட்டம் பெற்ற அதே ஆண்டு ஜார்ஜியானா விட்மோர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சார்லஸ் பாபேஜ் 1816 ஆம் ஆண்டு அரசு சமுதாயத்தின் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். பின் சார்லஸ் பாபேஜ் 1820 ஆம் ஆண்டு வானியல் சமுதாயத்தை நிறுவ உதவினார். இவர் கணினி மட்டுமல்லாது பலவகையான எந்திரங்களையும் கண்டுபிடித்துள்ளார். இவர் 1871 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி இவ்வுலக வாழ்வை துறந்தார்.

மின்சாரத்தை கண்டுபிடித்தவர் யார்?

சார்லஸ் பாபேஜ் கண்டுபிடித்த எந்திரங்கள்: 

 1. கண் பரிசோதனைக்கருவி.
 2. கலங்கரை விளக்கு ஒளி.
 3. சீரான அஞ்சல் கட்டண முறை.
 4. நியமத் தொடருந்துப் பாதை அளவுக்கருவி.
 5. வாகனமங்களின் வேகமானி.
 6. புகையிரதத்தின் தைனமோ மீற்றர்.
 7. சூரிய ஒளி கொண்டு கண்களைச் சோதிக்கும் கருவி.
 8. பாஸ்கல் இயந்திரம்.
 9. மணிச்சட்டம்.
 10. நேப்பியர் கருவி.
 11. பாஸ்கல் இயந்திரம்.
 12. டிபரன்ஸ் இயந்திரம்.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>GK  in Tamil