தமிழ்நாட்டின் ஆளுநர் பெயர் என்ன?

Advertisement

தமிழக ஆளுநர்கள் பட்டியல்..! Tamil Nadu Governor Name List in Tamil

வணக்கம் நண்பர்களே.. ஆளுநர் என்றால் ஆட்சி செய்ப்பவர் என்று பொருள். இத்தகைய ஆளுநர்களை குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றன. தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் மாநிலங்களில் ஆளுநர்களும், இந்தியாவின் ஆட்சிப்பகுதிகளில் துணை ஆளுநர்களும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்றுப் பணியாற்றுகின்றனர். ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். சரி இப்பதிவில் தமிழ்நாட்டில் ஆளுநர்கள் பட்டியக்கலை பதிவு செய்துள்ளோம். இது TNPSC போன்று பொது தேர்வுகளுக்கு தயாரிக்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் படித்து பயன்பெறுங்கள்.

தமிழக ஆளுநர்கள் பட்டியல்:

தமிழக ஆளுநர்கள் ஆரம்பம் முடிவு
31. ஆர். என். ரவி 18 செப்டம்பர் 2021 தற்போது பதவியில்
30. பன்வாரிலால் புரோகித் 06 அக்டோபர் 2017 17 செப்டம்பர் 2021
29. சி. வித்தியாசாகர் ராவ் 02 செப்டம்பர் 2016 06 அக்டோபர் 2017
28. கொனியேட்டி ரோசையா 31 ஆகஸ்ட் 2011 30 ஆகஸ்ட் 2016
27. சுர்ஜித் சிங் பர்னாலா 03 நவம்பர் 2004 31 ஆகஸ்ட் 2011
26. பி.எஸ். ராம்மோகன் ராவ் 18 ஜனவரி 2002 03 நவம்பர் 2004
25. சி. ரங்கராஜன் 03 ஜூலை 2001 18 ஜனவரி 2002
24. எம். பாத்திமா பீவி 25 ஜனவரி 1997 03 ஜூலை 2001
23. கிரிஷன் காந்த் 02 டிசம்பர் 1996 25 ஜனவரி 1997
22. எம். சென்னா ரெட்டி 31 மே 1993 02 டிசம்பர் 1996
21. பீஷ்ம நாராயண் சிங் 15 பிப்ரவரி 1991 31 மே 1993
20. சுர்ஜித் சிங் பர்னாலா 24 மே 1990 15 பிப்ரவரி 1991
19. பி. சி. அலெக்சாண்டர் 17 பிப்ரவரி 1988 24 மே 1990
18. சுந்தர் லால் குரானா (எஸ். எல். குரானா) 03 செப்டம்பர் 1982 17 பிப்ரவரி 1988
17. சாதிக் அலி 04 நவம்பர் 1980 03 செப்டம்பர் 1982
16. எம். எம். இஸ்மாயில் 27 அக்டோபர் 1980 04 நவம்பர் 1980
15. பிரபுதாஸ் பட்வாரி 27 ஏப்ரல் 1977 27 அக்டோபர் 1980
14. பி. கோவிந்தன் நாயர் 09 ஏப்ரல் 1977 27 ஏப்ரல் 1977
13. மோகன் லால் சுகாதியா 16 ஜூன் 1976 08 ஏப்ரல் 1977
12. கோதர்தாஸ் காளிதாஸ் ஷா (கே. கே. ஷா) 27 மே 1971 16 ஜூன் 1976
11. சர்தார் உஜ்ஜல் சிங் 14 ஜனவரி 1969 27 மே 1971
10. சர்தார் உஜ்ஜல் சிங் (தற்காலிகமாக 16 ஜூன் 1967 வரை) 28 ஜூன் 1966 14 ஜனவரி 1969
9. ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் 7 டிசம்பர் 1965 28 ஜூன் 1966
8. பி. சந்திர ரெட்டி 24 நவம்பர் 1964 7 டிசம்பர் 1965
7. ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் 4 மே 1964 24 நவம்பர் 1964
6. விஷ்ணுராம் மேதி 24 ஜனவரி 1958 4 மே 1964
5. பகாலா வெங்கட்ட ராஜமன்னார் 1 அக்டோபர் 1958 24 ஜனவரி 1958
4. ஏ. ஜே. ஜான், ஆனாப்பரம்பில் 10 டிசம்பர்1956 30 செப்டம்பர் 1958
3. ஸ்ரீ பிரகாசா 12 மார்ச்1952 10 டிசம்பர் 1956
2. கிருஷ்ண குமாரசிங் பவசிங் 7 செப்டம்பர் 1948 12 மார்ச் 1952
1. ஆர்ச்சிபால்டு எட்வர்டு நை 6 மே1946 7 செப்டம்பர் 1948

 

இந்தியாவின் பெண் ஆளுநர்கள் பட்டியல்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement