உலகில் அதிக அருங்காட்சியங்கள் உள்ள நாடு எது | Which Country Has The Most Museums in The World in Tamil
அருங்காட்சியகம் என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும்..! அதனை சுற்றி பார்க்க நிறைய மனிதர்கள் செல்வார்கள். அங்கு பழமையான விதவிதமான ராஜாக்கள் உடை மற்றும் சாமி சிற்ப சிலைகள் என நிறைய பொருட்களை பாதுகாத்து வைக்க கூடிய இடம் தான் அருங்காட்சியகம் ஆகும். தமிழ்நாட்டில் அருங்காட்சியங்கம் அதிகளவு இல்லை. எந்த நாட்டில் அதிகளவு அருங்காட்சியங்கம் உள்ளது என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..!
உலகில் அதிக அருங்காட்சியங்கள் உள்ள நாடு எது..?
விடை: ஜெர்மனி
இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட அருங்காட்சியங்கள் உள்ளன.
ஜெர்மனியின் சிறப்பு:
ஜெர்மனி ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள நாடு. போலந்து, பெல்ஜியம் நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஜெர்மனி நாட்டின் எல்லைகளாக அமைத்துள்ளது.
ஜெர்மனி உயர் வாழ்க்கை கொண்ட நாடாகவும், சமூக பாதுகாப்பு உடைய நாடாகவும் விளங்குகிறது. இந்த நாட்டில் நிறைய தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள் வாழ்ந்து வந்தார்கள்.
ஜெர்மனி என்றால் முதலில் நியாபகத்திற்கு வருவது ஹிட்லர் தான். இவர் 1933 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை சர்வாதிகாரியாக ஆட்சி செய்து வந்தார்.
உலகில் வாழ்வதற்கான சிறந்த நாடுகளுக்கான பட்டியலில் ஜெர்மனிக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 பால் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது..?
இந்த நாட்டில் பொருளாதாரம், கலாச்சாரம், தொழில் கட்டமைப்பு, வாழ்வாதாரம் என அனைத்திலும் சிறந்து விளங்குவதில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு ஜெர்மனி தான். பெர்லினை தலைநகரமாக கொண்ட இந்த நாட்டில் 82 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
ஜெர்மனி நாடு மூன்றில் ஒரு பங்கு அடர்ந்த காடுகளாலும், மரங்களாலும் நிறைந்த நாடாகும்.
உலக அளவில் அதிகமாக கற்றுக்கொள்ளக் கூடிய பிரபலமான மொழியாக ஜெர்மன் மொழி உள்ளது.
உலகில் அதிக கார்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக ஜெர்மனியும் உள்ளது. உலகில் முதல் புத்தகம் அச்சிடப்பட்ட மொழியும் ஜெர்மன் மொழியில் தான்.
உலகில் அதிகமாக கண்டு பிடிப்புகளை வெளியிடப்பட்ட நாடும் ஜெர்மனி தான்.
ஜெர்மனியில் கால்பந்து விளையாட்டு மிகவும் பிரபலமானது ஆகும். இந்நாட்டின் தேசிய விளையாட்டும் கால்பந்து தான்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 உலகில் அதிக மருத்துவர்கள் உள்ள நாடு எது..?
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |