இதய அடைப்பு வராமல் இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க..

how to stop heart block in tamil

இதய அடைப்பு வராமல் இருக்க

நமது உடலின் முக்கியமான உறுப்பாக  இதயம் உள்ளது. இதயம் சார்ந்த பிரச்சனைகளை முன்கூட்டியே பார்ப்பது நல்லது. நம் இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் நமது உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் சரியாக இருக்கும். அதனால் இன்றைய பதிவில் இதய அடைப்பு வராமல் இருக்க சரி சாப்பிடவேண்டிய உணவுகளை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

சிட்ரஸ் பழங்கள்: 

 இதய அடைப்பு நீங்க உணவு சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் இதய அடைப்பை வராமல் பாதுக்காக்கிறது. அதிலும் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை பழம் போன்ற பழங்களை சாப்பிடுவதன் மூலம் இதயத்தில் ஏற்படும் அடைப்பை குறைக்க உதவுகிறது. ஏனெனில்  சிட்ரஸ் பழங்களில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து நமது உடலை பாதுகாக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் சிட்ரஸ் பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் இதயத்தில் ஏற்படும் அடைப்பை தடுக்கிறது.

வயிற்று புண் இருப்பவர்கள் இதை சாப்பிடுங்கள்.. வயிற்று புண் விரைவில் குணமாகும்..!

பீட்ரூட்: 

 இதய அடைப்பு வராமல் இருக்க

பீட்ரூட்டில் நைட்ரிக் ஆக்சைடு சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது இரத்த நாளங்களில் உள்ள வீக்கத்தை தடுப்பதற்கு பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் ரத்த நாளங்களில் ஏற்படும் அழற்சியை வேகமாக குறைக்க உதவுகிறது. எனவே பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் இதயத்தில் எற்படும் அடைப்பை தடுக்கிறது.

வாதுமை பருப்பு: 

 இதயம் அடைப்பு நீங்க

வாதுமை பருப்பில் பல்வேறு சத்துக்களை கொண்டது. இது இதயம் மற்றும் மூளை இரண்டு உறுப்புகளுக்கு நன்மை தரக்கூடியது. இதில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஒமேகா அமிலங்களும் பெருமளவு நிறைந்துள்ளது. வாதுமை பருப்பை சாப்பிடுவதன் மூலம் இதயத்தை பாதுகாப்பாகவும், அடைப்பு வராமலும் பாதுகாக்கிறது.

என்ன சொல்றீங்க..! இந்த உணவெல்லாம் சாப்பிட பிறகு நஞ்சா மாறுமா..?

தக்காளி :  இதய அடைப்பு நீங்க உணவு

நம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் தக்காளியை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அதில் லைகோபீன் என்ற சத்துக்கள் இதய அடைப்பு வருவதை தடுக்கிறது. இது இதய தமனியில் எற்படும் தடிப்புகள் மற்றும் தோல் அழற்சியை குறைக்க உதவுகிறது.

பெர்ரி: 

 how to stop heart block in tamil

பெர்ரி பழங்களை அதிகம் கேக் செய்வதற்கு பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் தாவர கலவைகள் அதிகம் நிறைந்துள்ளன. அதனால் பெர்ரி பழம் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் இரத்தம் அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி வைக்க பெரிதும் உதவுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips