மங்குஸ்தான் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன..?

Mangosteen Benefits in Tamil

தினமும் நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் உடலுக்கு அதிக நன்மையினை அளிக்கக்கூடியது என்றால் அவை பழங்கள் மற்றும் காய்கறிகள் தான். ஆனால் நாம் இந்த இரண்டினையும் தான் அதிகமாக சாப்பிட மாட்டோம். அதுவும் குறிப்பாக காய்கறிகள் என்றாலே சிலர் சுத்தமாக சாப்பிட மாட்டார்கள். அதற்கு மாறாக ஸ்னாக்ஸ் வகைகளை தான் சாப்பிடுவார்கள். ஸ்னாக்ஸ் வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து பழ வகைகளில் ஏதாவது ஒரு பழத்தினை சாப்பிட்டாலோ போதும் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு பழத்தில் மற்றும் காய்கறிகளில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்று கூட தெரியாமல் இருக்கிறது. அதனால் இன்று மங்குஸ்தான் பழம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் மற்றும் சத்துக்கள் பற்றிய விரிவாக தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

மங்குஸ்தான் பழத்தின் சத்துக்கள்:

 1. வைட்டமின் B1
 2. வைட்டமின் B2
 3. வைட்டமின் B5
 4. வைட்டமின் C
 5. புரதசத்து
 6. நார்சத்து
 7. பாஸ்பரஸ்
 8. இரும்புச்சத்து
 9. கார்போஹைட்ரேட்
 10. கொழுப்பு
 11. கலோரிகள்

மேலே சொல்லப்பட்டுள்ள சத்துக்கள் அனைத்தும் 100 கிராம் மங்குஸ்தான் பழத்தில் நிறைந்து இருக்கிறது.

ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்

மங்குஸ்தான் பழம் பயன்கள்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

நோய் எதிர்ப்பு சக்தி

மங்குஸ்தான் பழத்தினை நாம் சாப்பிடுவதன் மூலமாக அதில் உள்ள வைட்டமின் C சத்து ஆனது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்து ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ உதவுகிறது.

புற்றுநோய் வராமல் தடுக்க:

புற்றுநோய் வராமல் தடுக்க

இத்தகைய பழத்தினை நாம் சாப்பிடுவதன் மூலம் இதில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் ஆனது உடலில் புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கும் செல்களை அழிக்க செய்து புற்றுநோய் வராமல் இருக்க உதவுகிறது.

அதேபோல் இந்த இரண்டு சத்துக்களும் முகத்தில் இருக்கும் வீக்கம், அலர்ஜி போன்றவற்றையினையும் நீக்கி முகத்தை நன்றாக இருக்க செய்கிறது.

மலச்சிக்கல் தீர:

மலச்சிக்கல் பிரச்சனை தீரஇதில் நார்சத்து இருப்பதால் நீண்ட நாட்களாக மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த பழத்தினை சாப்பிட்டு வருவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை சரி ஆகிவிடும்.

 

இதய ஆரோக்கியம்:

இதய ஆரோக்கியம்

மங்குஸ்தான் பழத்தினை நாம் சாப்பிடுவதன் மூலம் நம்முடைய இதயம் ஆனது ஆரோக்கியமாக இருக்கும். அதாவது இந்த பழத்தில் உள்ள ஒமேகா 6 வேதிப்பொருள் ஆனது இதயத்தை எந்த பிரச்சனைகளும் இல்லாமல் ஆரோக்கியமாகி வாழ வழிவகுக்கிறது.

வயிற்று புண்:

வாய் துர்நாற்றம் நீங்கஅதுமட்டும் இல்லாமல் இந்த மங்குஸ்தான் பழத்தின் பொடியுடன் தேங்காய் எண்ணெய் கலந்து நாம் சாப்பிட்டு வருவதன் மூலம் வயிற்று புண், வாய் புண் குணமாவதோடு மட்டும் இல்லாமல் வாயில் துர்நாற்றம் இல்லாமல் இருக்க செய்கிறது.

மேலே சொல்லப்பட்டுள்ளது மட்டும் இல்லாமல் மங்குஸ்தான் பழம் ஆனது உடல் எடை குறைவு, தேவையற்ற கொழுப்பினை குறைய வைத்தல், உடலின் சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைத்தல் என இதுபோன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வினை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

 

 

ஆப்ரிகாட் பழம் பயன்கள்
லிச்சி பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்