வாய் விட்டு சிரிக்க கேள்வி மற்றும் பதிலுடன் கடி ஜோக்ஸ்

Advertisement

Kadi Jokes Questions in Tamil

நம் முன்னோர்களின் காலத்தில் மனிதர்களுடன் பேசி மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் உள்ளவர்கள் வீட்டில் இருக்கும் டென்சன், வேலையில் இருக்கும் டென்சன் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகுகிறார்கள். நாள் முழுவதும் வேலை பார்த்து விட்டு வீடு திரும்பியதும் மொபைலை தான் பார்க்கிறார்கள்.

மொபைலை பார்த்து தங்களின் மனதை அமைதிப்படுத்துவதற்காக சில காமெடி வீடியோ, ஜோக்ஸ் போன்றவற்றை பார்த்து சிரிப்போம் அல்லவா.! அதனால் தான் நம் பதிவில் நிறைய வகையான ஜோக்ஸ்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கடி ஜோக்ஸ் கேள்வி மற்றும் பதிலுடன் அறிந்து கொள்வோம்.

கடி ஜோக்ஸ் கேள்வி மற்றும் பதிலுடன்:

1.கீழே விழுந்தாலும் காயம் படாமல் இருப்பது எது?

விடை: மழை

2. ஒரு பச்சை கற்களை கடலில் வீசி இருந்தால் அது என்னவாகும்?

விடை:வேறன்ன ஈரமாகும்

3. மரம் செடி இல்லாத காடு எது?

விடை: சிம் கார்டு தான்

4. பல் வலிக்க முக்கியமான காரணம் என்ன?

விடை: பற்கள் தான்

5. பசுமாடு ஏன் பால் தருகிறது?

விடை: ஏன்னா அதால காபி தர முடியாது

6. கணக்கு பரிட்சையில் கணக்கு போடாமல் எதுக்குடா இப்படி டான்ஸ் ஆடிட்டு இருக்க?

விடை: சார் நீங்க தான் சொன்னீங்க ஸ்டெப்ஸ்க்கு மார்க் உண்டு என்று

7. ஏண்டா மெதுவா லட்டர் எழுதுகிரா?

விடை: எங்க அம்மாவுக்கு வேகமா படிக்க வராதது தான்

8. எலிக்கு ஏன் வால் இருக்கு?

விடை: எலி செத்த பின்னாடி தூக்கி போடுறதுக்கு தான்

9. இரும்பு மனிதர் என்று யாரை அழைக்கலாம்?

விடை: மனைவியின் அடியே தாங்கிக் கொண்டு ஆழமாய் இருப்பவரே

10. கோழி ஏன் முட்டை போடுது?

விடை: ஏன்னா அதுக்கு ஒன்னு ரெண்டு மூணு போட தெரியாது சார்.

கணவன் மனைவி கடி ஜோக்ஸ்

11. கண்ணகி மதுரையை அழித்தால் இது எந்த காலம்?

விடை: பயர் சர்வீஸ் இல்லாத காலம் சார்.

12. பறவைகள் எங்கிருந்து வருகின்றன?

விடை: முட்டையிலிருந்து.

13. எறும்பு பெருசா யானை பெருசா?

விடை: அப்படியெல்லாம் சொல்ல முடியாது மேடம் பிறந்த தேதி வேணும்.

14. டாக்டர் என்ன நாய் கடித்து விட்டது எந்த இடத்தில?

விடை: பெருமாள் கோவில் சந்துல.

15. ஆறும் ஆறும் சேர்ந்தால் என்ன வரும்?

விடை:  வெள்ளம் வரும்.

16. சாப்பிட முடியாத கனி எது?

விடை:  பால்கனி.

17. ஸ்கூல்ல எக்ஸாம் அன்னைக்கு எல்லாரும் கலர் டிரஸ் போட்டு போனாங்களாம் ஏன்?

விடை:  ஏன்னா அது மாடல் Exam

18. ஒருத்தன் ரொம்ப நேரமா வண்டிய தள்ளிகிட்டே போனானாம் ஏன்?

விடை: அது தள்ளுவண்டியாம்.

19. ஹோட்டல் போயிட்டு இட்லிய பார்த்து பயந்து ஓடினான் ஏன்?

விடை: ஏன்னா இட்லில இருந்து ஆவியா வந்துச்சாம்.

20. பட்டுப்பூச்சியில் இருந்து எதை எடுக்குறாங்க?

விடை: உயிரே எடுக்குறாங்க

மரண மொக்க ஜோக் சொல்றேன் கேட்டுக்கோங்க 

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்

 

Advertisement