Tamil Kadi Jokes
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நகைக்சுவையை விரும்பாதவர்கள் என்று யாருமில்லை. நமது நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாராவது சோகமாக இருந்தால் அவர்களை சிரிக்க வைப்பதற்கு சில ஜோக்ஸ்களை சொன்னால் கவலையை மறந்து சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற பழமொழி இருக்கிறது. ஆனால் இன்றைய காலத்தில் வீட்டில் இருப்பவர்களும் சரி வேலைக்கு செல்கிறவர்களும் சரி பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசுவதில்லை. காரணம் ஸ்மார்ட் போன் தாங்க. இந்த போனையே தான் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் உங்களுக்கு உதவும் உதவும் வகையில் நீங்கள் கவலையில் இருக்கும் நேரத்தில் உங்களை சிரிக்க வைப்பதற்கு சில ஜோக்ஸ்களை பற்றி காண போகிறோம்.
கடி ஜோக்ஸ் விடுகதைகள் தமிழ்:
- ஒருத்தர் Tube light-யை பார்த்து சிரிச்சாராம் ஏன்.?
விடை: ஏன்னா அதுல ஜோக் இருக்காம்.
2. ஒருநாள் Albhabets-க்கலாம் ரன்னிங் ரேஸ் வம்சங்களாம். அதுல எல்லா லெட்டரும் ஓடி போச்சாம் ஆனா S மட்டும் நீந்தி போச்சா ஏன்.?
விடை: ஏன்னா S முன்னடி R இருக்கும்ல
3. பறவைகள் எல்லாம் வேற நாட்டிலருந்து நம்ம நாட்டிற்கு பறந்து வருது
விடை: நடந்து வந்தால் லேட் ஆகும் அதான்.
4. ஒரு பையன் அவங்க அப்பாகிட்ட ஊட்டிக்கு கூட்டிட்டு போங்கன்னு சொன்னானா.! எதற்குன்னு அவங்க அப்பா கேட்டதுக்கு ஒரு பதில் சொன்னானாம். உடனே அவர் Mechanic shop-கக்கு கூட்டிட்டு போனாராம் ஏன்.?
விடை: ஏன்னா அவன் சுத்தி பாக்கணும்னு சொன்னானாம்.
5. ஒருத்தர் வேகமா ஓடி பொய் எல்லா டிக்கெட்டையும் எடுத்தாராம் ஏன்.?
விடை: ஏன்னா அவர் தான் பஸ் ஓட கண்டக்டர்
6. ஒருத்தர் மாடிக்கு wig எடுத்துட்டு போனாராம் ஏன்.?
விடை: ஏன்னா அது மொட்டை மாடி
7. ஒரு பையன் maths exam-க்கு விரல் முழுவதும் Fformula எழுதிட்டு போனானாம் ஏன்.?
விடை: ஏன்னா அவங்க டீச்சர் சொன்னாங்களாம், Formula-லாம் finger tip-ல இருக்கணும்னு..
8. Animals-க்கு Race வச்சா எந்த Animals first வரும்.?
விடை: முதல தான்.
9. எந்த எழுத எழுத முடியாது.?
விடை: தலை எழுத்து
10. Beach-ல வீடு கட்டினால் என்ன ஆகும்.?
விடை: காசு செலவாகும்
கடி ஜோக்ஸ் தமிழில்:
- மீன் பிடிக்கிறவனை மீனவன் என்று சொல்லலாம்.. நாய் பிடிக்கறவனை நாய்னு சொல்ல முடியுமா?
- பொங்கலுக்கு கவர்மெண்ட்டுல லீவு கொடுப்பாங்க… ஆனா இட்லி, தோசைக்கு கொடுப்பாங்களா?
- ஏழு பரம்பரைக்கு உக்காந்து சாப்பிட பைசா இருந்தாலும், பாஸ்ட் ஃபுட் கடையில நின்னுக்கிட்டுதான் சாப்பிடணும்
- தேன் கொட்டினா வலிக்கும் … பாம்பு கொட்டினா வலிக்கும்… முடி கொட்டினா வலிக்குமா?
- என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிக்குள்ள போடா முடியாது
- கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம், காவிரி ஆத்துல மீன் பிடிக்கலாம் ஆனால் அய்யர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?
மரண மொக்க ஜோக் சொல்றேன் கேட்டுக்கோங்க
மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | கடி ஜோக்ஸ் |