நோயும் மருந்தும் கொஸ்டின் ஆன்சர் | Samacheer Kalvi 8th Tamil Book Solutions
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய கல்வி சார்ந்த பகுதியில் எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் மாணவர்களின் நலன் கருதி தமிழ் மொழிப்படத்தில் அமைந்துள்ள வினா விடைகளை பதிவிட்டுள்ளோம். மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் ஒவ்வொரு தேர்வாளர்களுக்கும் இந்த பதிவானது மிகவும் பயன்படும். ஏனென்றால் பாட புத்தகத்தில் உள்ள வினா விடைகள் தான் பெரும்பாலும் அரசு தேர்வுகளில் கேட்கப்படுகிறது. வாங்க பருவம் 1-ல் அமைந்துள்ள நோயும் மருந்தும் உள்ள கேள்வி பதில்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..
எட்டாம் வகுப்பு திருக்குறள் வினா விடைகள் |
I. சொல்லும் பொருளும்:
- தீர்வன – நீங்குபவை
- திறத்தன – தன்மையுடையன
- உவசமம் – அடங்கி இருத்தல்
- கூற்றவா – பிரிவுகளாக
- நிழல்இகழும் – ஒளிபொருந்திய
- பூணாய் – அணிகலன்களை அணிந்தவளே
- பேர்தற்கு – அகற்றுவதற்கு
- பிணி – துன்பம்
- திரியோகமருந்து – மூன்று யோகமருந்து
- ஓர்தல் – நல்லறிவு
- தெளிவு – நற்காட்சி
- பிறவார் – பிறக்கமாட்டார்
II. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக:
1. உடல் நலம் என்பது _______ இல்லாமல் வாழ்தல் ஆகும்.
- அணி
- பணி
- பிணி
- மணி
விடை: பிணி
2. நீலகேசி கூறும் நோயின் வகைகள் ______.
- இரண்டு
- மூன்று
- நான்கு
- ஐந்து
விடை: மூன்று
3. ‘இவையுண்டார் ‘ என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது _______.
- இ + யுண்டொர்
- இவ் + உண்டொர்
- இவை + உண்டார்
- இவை + யுண்டொர்
விடை: இவை + உண்டார்
4. தாம் + இனி என்பதை்சேர்த்து எழுத கி்டக்கும் சொல் _______.
- தாம் இனி
- தாம்மினி
- தாமினி
- தாமனி
விடை: தாமினி
எட்டாம் வகுப்பு வினைமுற்று வினா விடைகள் |
III. குறு வினா:
1. நோயின் மூன்று வகைகள் யாவை?
- மருந்தினால் நீங்கும் நோய்
- எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை
- வெளியில் ஆறி உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.
2. நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை?
- நல்லறிவு,
- நற்காட்சி,
- நல்லாெழுக்கம் என்பவையே பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன.
IV. சிறு வினா:
- நோயின் வகைகள், அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?
- ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நோயின் தன்மை பற்றி யார் வினவினாலும் அது மூன்று வகைப்படும் என அறிவாயாக.
- மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை.
- எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை.
- வெளியில் ஆறி உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.
- அகற்றுவதற்கு அரியவை பிறவித் துன்பங்கள் ஆகும்.
- இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையே அம்மருந்துகள்.
- இவற்றை ஏற்றோர் பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.
வெட்டுக்கிளியும் சருகுமானும் கதை சுருக்கம் |
நோயும் மருந்தும் – கூடுதல் வினாக்கள்:
I. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. மக்களின் உடலுக்கும், உள்ளத்திற்கும் துன்பம் தருவன _______________
விடை: நோய்கள்
2. உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களால் ஏற்படும் துன்பங்களையும் _______________ என்றே நம் முன்னோர்கள் குறிப்பிடப்பட்டனர்.
விடை: நோய்கள்
3. நோய்களை நீக்கும் மருந்துகளாக விளங்கும் அறக்கருத்துகளை விளக்குபவை _______________
விடை: இலக்கியங்கள்
4. நோயை தீர்க்கும் மருந்துகள் _______________
விடை: மூன்று
5. நீலகேசி _______________ ஒன்று
விடை: ஐஞ்சிறு காப்பியங்களுள்
II. பிரித்து எழுதுக:
- போலாதும் = போல் + ஆதும்
- உய்ப்பனவும் = உய்ப்பன + உம்
- கூற்றவா = கூற்று + அவா
- ஐம்பெருங்காப்பியம் = ஐந்து + பெருமை + காப்பியம்
- அரும்பிணி = அருமை + பிணி
- தெளிவோடு = தெளிவு + ஓடு
- பிணியுள் = பிணி + உள்
- இன்பமுற்றே = இன்பம் + உற்றே
நிலம் பொது எட்டாம் வகுப்பு வினா விடை |
III. குறுவினா:
1. அகற்றுவதற்கு அரியவை எவை?
அகற்றுவதற்கு அரியவை பிறவித் துன்பங்கள் ஆகும்.
2. பிறவித் துன்பங்களைத் தீர்க்கும் மருந்துகள் எத்தனை?
பிறவித் துன்பங்களைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று.
- நல்லறிவு
- நற்காட்சி
- நல்லொழுக்கம் என்பவையே அம்மருந்துகள்.
3. எதனை ஏற்றோர் பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்?
பிறவித் துன்பங்களை நீக்கும் மருந்துகளாகிய நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் ஆகிய மூன்றினையும் ஏற்றோர் பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.
4. நோய்கள் எவற்றிற்கெல்லாம் துன்பம் தருவன?
நோய்கள் மக்களின் உடலுக்கும், உள்ளத்திற்கும் துன்பம் தருவன.
எட்டாம் வகுப்பு ஓடை வினா விடைகள் |
5. நம் முன்னோர்கள் எதனை நோய்கள் என குறிப்பிடப்பட்டனர்?
உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களால் ஏற்படும் துன்பங்களையும் நோய்கள் என்றே நம் முன்னோர்கள் குறிப்பிடப்பட்டனர்.
6. ஐஞ்சிறுகாப்பியங்கள் யாவை?
- சூளாமணி
- நீலகேசி
- உதயண குமார காவியம்
- யேசாதர காவியம்
- நாககுமார காவியம்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |