எட்டாம் வகுப்பு ஓடை வினா விடைகள் | 8th Tamil Odai Question Answer

Advertisement

சமச்சீர் கல்வி எட்டாம் வகுப்பு தமிழ் ஓடை வினா விடைகள் | 8th Standard Tamil Book Term 1 Lesson 2.1

பள்ளி பயிலும் மாணவர்களின் நலன் கருதி தமிழ் மொழி பாடத்தில் அமைந்துள்ள வினா விடைகளை படித்து தெரிந்துக்கொள்ளுவோம். புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகள் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் ஒவ்வொரு தேர்வாளர்களுக்கும் மிகவும் பயன்படக்கூடிய ஒன்று. இந்த பதிவில் எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் அமைந்துள்ள ஓடை வினா விடைகளை (ஓடை பாடல் எட்டாம் வகுப்பு வினா விடை) படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

எட்டாம் வகுப்பு தமிழ் பாடம் எழுத்துக்களின் பிறப்பு வினா விடைகள்

odai lesson in tamil

I. சொல்லும் பொருளும்:

  1. தூண்டுதல் – ஆர்வம்கொள்ளுதல்
  2. பயிலுதல் – படித்தல்
  3. ஈரம் – இரக்கம்
  4. நாணம் – வெட்கம்
  5. முழவு – இசைக்கருவி
  6. செஞ்சொல் – திருந்தியசொல்
  7. நன்செய் – நிறைந்தை நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
  8. புன்செய் – குறைந்தை நீரொல் பயிர்கள் விளையும் நிலம்
  9. வள்ளைப்பாட்டு -நெல்குத்தும் போது பாடப்படும் பாடல்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்பு.

A. பயிலுதல்
B. பார்த்தல்
C. கேட்டல்
D. பாடுதல்

விடை: பயிலுதல்

2. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ________.

A. கடல்
B. ஓடை
C. குளம்
D. கிணறு

விடை: ஓடை

3. ‘நன்செய்’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

A. நன் + செய்
B. நன்று + செய்
C. நன்மை + செய்
D. நல் + செய்

விடை: நன்மை + செய்

4. ‘நீளுழைப்பு’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.

A. நீளு + உழைப்பு
B. நீண் + உழைப்பு
C. நீள் + அழைப்பு
D. நீள் + உழைப்பு

விடை: நீள் + உழைப்பு

5. சீருக்கு + ஏற்ப – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் __________.

A. சீருக்குஏற்ப
B. சீருக்கேற்ப
C. சீர்க்கேற்ப
D. சீருகேற்ப

விடை: சீருக்கேற்ப

6. ஓடை + ஆட – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.

A. ஓடைஆட
B. ஓடையாட
C. ஓடையோட
D. ஓடைவாட

விடை: ஓடையாட

எட்டாம் வகுப்பு இயல் 1 சொற்பூங்கா வினா விடைகள்

எட்டாம் வகுப்பு ஓடை வினா விடைகள்

III. குறுவினா:

1. ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?

ஓடை கற்களில் உருண்டும், தவழந்தும், நெளிந்தும், சலசல என்று ஒலியெழுப்பியும் அலைகளால் கரையை மோதியும், இடையறாது ஓடுகிறது.

2. ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் கூறுகிறார்?

ஓடை எழுப்பும் ஒலி, பெண்கள் பாடும் வள்ளைப்பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முகுக்குவதற்கு உவமையாக வாணிதாசன் கூறுகிறார்.

IV. சிறுவினா:

ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை:

  • நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களை செழிக்க செய்கிறது.
    விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.
  • கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது.
  • குளிர்ச்சியை தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.
  • நெஞ்சில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையாழ ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.

ஓடை – கூடுதல் வினாக்கள்:

I. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. மனிதர் வாழ்வு _______________ இயைந்தது.

விடை: இயற்கையோடு

2. தமிழகத்தின் _____________ என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்

விடை: வேர்ட்ஸ்வொர்த்

3. பிரெஞ்சு அரசு கவிஞர் வாணிதாசனுக்கு _____________ வழங்கியுள்ளது.

விடை: செவாலியர் விருது

4. _____________ என்று அழைக்கப்படுபவர் கவிஞர் வாணிதாசன்

விடை: பாவலர்மணி

எட்டாம் வகுப்பு இயல் 1 தமிழ் வரி வடிவ வளர்ச்சி வினா விடைகள்

II. குறுவினா:

1. வள்ளைப்பாட்டு என்றால் என்ன?

பெண்கள் நெல் குத்தும்போது பாடும் பாட்டு வள்ளைப் பாட்டு ஆகும்

2. நன்செய், புன்செய் நிலம் பற்றி எழுதுக

  • நன்செய் நிலம் – நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
  • புன்செய் நிலம் – குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்.

3. நம் மனத்தை மயக்க வல்லவை எவை?

கவின்மிகு காலைப்பொழுதும், மயக்கும் மாலைப்பொழுதும், பிறை நிலவும், ஓடும் ஓடையும், பாயும் ஆறும், கத்தும் கடலும் நம் மனத்தை மயக்க வல்லவை.

III. சிறுவினா:

1. வாணிகதாசன் எழுதியுள்ள நூல்கள் சிலவற்றை கூறு?

  • தமிழச்சி
  • கொடிமுல்லை
  • தொடுவானம்
  • எழிலோவியம்
  • குழந்தை இலக்கியம்

2. வாணிகதாசன் எந்தெந்த மொழிகள் வல்லவர்?

  • தமிழ்
  • தெலுங்கு
  • ஆங்கிலம்
  • பிரெஞ்சு

3. வாணிகதாசன் – குறிப்பு வரைக:

  • தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்.
    இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு ஆகும்.
  • இவர் பாரதிதாசனின் மாணவர் ஆவார்
  • தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர்
  • கவிஞரேறு, பாவலர்மணி முதலான சிறப்புப் பெயர்களைப் பெற்றவர்.
  • பிரெஞ்சு அரசு இவருக்கு செவாலியர் விருது வழங்கியுள்ளது.
  • தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களில் சிலவாகும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement