Fundamental Rights TNPSC Questions in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நாம் TNPSC Questions on Fundamental Rights in Tamil பற்றி பார்க்கலாம் வாங்க. பொதுவாக, TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் TNPSC தேர்வு பற்றி விவரங்களையும், தேர்வில் கேட்கப்படும் கேள்விகளின் முறை ஆகியவற்றை தெரிந்துகொண்டு அதற்கேற்ப தேர்வுக்கு தயாராக வேண்டும். அப்படி பார்த்தால் TNPSC தேர்வுக்கு அதிகமாக படிக்க வேண்டும். எனவே, TNPSC தேர்வில் கேட்கப்படும் கேள்விகளில் Fundamental Rights -ம் அடங்கும். ஆகையால், TNPSC Questions on Fundamental Rights in Tamil தெரிந்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
எனவே, தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் TNPSC தேர்வில் கேட்கப்படும் அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) குறித்த கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
TNPSC Questions on Fundamental Rights in Tamil:
1.எந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் வாயிலாக சொத்துரிமை அடிப்படை உரிமையில் இருந்து நீக்கப்பட்டது ?
விடை : 44 வது திருத்தம்
2.அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் ,1946 ஆம் ஆண்டில் எந்த நாளில் நடைபெற்றது.?
விடை : டிசம்பர் 9
3.இந்திய அரசியலமைப்பின் தந்தை என அழைக்கபடுப்பவர் யார்.?
விடை : டாக்டர் B.R அம்பேத்கார்.
4.இந்திய அரசியலமைப்பு சட்டம் எத்தனை முகவுரை கொண்டது.?
விடை : 1
TNPSC Shortcuts | TNPSC Shortcuts Tricks | TNPSC Shortcuts in Tamil
5.இந்திய அரசியலமைப்பு சட்டம் எத்தனை பாகங்களை கொண்டது.
விடை : 22
6.இந்திய அரசியலமைப்பு சட்டம் எத்தனை சட்டப்பிரிவுகளை கொண்டது.
விடை : 395
7.1950 ஆம் ஆண்டில் எந்த நாளில் இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.?
விடை : ஜனவரி 26
8.இந்திய அரசியலமைப்பு சட்டம் எத்தனை அட்டவணையை கொண்டுள்ளது.
விடை : 8
9.இந்திய அரசியலமைப்பு சட்டம் கையெழுத்தாளர் யார்.?
விடை : பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா
10.இந்திய அரசியலமைப்பு சட்டம் எந்த பணியில் எழுதப்பட்டது.?
விடை : இத்தாலிய
11.——– -வின் குறிக்கோள் தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை அமைந்துள்ளது.
விடை : ஜவஹர்லால் நேரு
12.1789 ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின் போது ——–ஆகியன முக்கிய முழக்கங்களாகின.
விடை : சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்.
13.——– மக்களாகிய நாம் என்ற சொற்களுடன் இந்திய அரசியலமைப்பின் முகவுரை தொடங்குகிறது.
விடை : இந்தியா
14.“சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வாழ்வின் அடிப்படைக் கோட்பாடுகளாக அங்கீகரிக்கும் சமூக ஜனநாயகம் எனும் அடித்தளம் இல்லையேல் அரசியல் ஜனநாயகத்தால் நீடிக்க இயலாது ” எனக் கூறியவர் யார் ?
விடை : பி.ஆர். அம்பேத்கர்
15.குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை 1966-ஐ இந்தியா எந்த ஆண்டு ஏற்றுக் கொண்டது?
விடை : 1979
16.“நீதி புணராய்வு” கருத்துரு ___________ அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது
விடை : அமெரிக்க அரசியலமைப்பு
17.இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 19 எத்தனை அடிப்படை சுதந்திரங்களை உத்தரவாதமளிக்கிறது?
விடை : 6
18.இந்திய அரசியலமைப்பின் கீழ் ஒரு சில அடிப்படை உரிமைகளை தவிர மற்ற அடிப்படை உரிமைகளை எப்பொழுது நிறுத்தி வைக்கப்படும்?
விடை : தேசிய நெருக்கடியின் போது
19. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ்க்கண்ட சரத்துகளில் எது கல்வி உரிமையைப் பற்றிக் கூறுகிறது?
- 21A
- 22
- 31A
- 24
விடை : 21A
TNPSC Group 4 Previous Year Question Paper Download
20.சொத்துரிமை என்பது எந்த சட்டப்பிரிவின் கீழ் ஒரு அரசியலமைப்பு உரிமை?
- 295 A
- 298 A
- 300 A
- 302 A
விடை : 300 A
21.இந்தியக் குடிமகனுக்கு எந்தவொரு உணவகம், சாலை அல்லது பொது இடங்களைப் பயன்படுத்த உரிமை உண்டு என்று இந்திய அரசியலமைப்பின் எந்த சரத்து கூறுகிறது?
விடை: சரத்து 15 (2)
22.இந்திய அரசியலமைப்பின் 19வது சரத்து பின்வரும் எந்த உரிமையை உள்ளடக்கியது?
- அரசியலமைப்பு தீர்வுகளுக்கான உரிமை
- சுரண்டலுக்கு எதிரான உரிமை
- பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை
- மத சுதந்திரத்திற்கான உரிமை
விடை : பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை
23.இந்திய அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகள் எதிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன?
- ரஷ்ய அரசியலமைப்பு
- U.S. அரசியலமைப்பு
- பிரிட்டிஷ் அரசியலமைப்பு
- சட்டம் 1935
விடை : U.S. அரசியலமைப்பு
24. இந்திய அரசியலமைப்பின் சரத்து 21A _______க்கான உரிமையை வழங்குகிறது.
- வேலை
- தனியுரிமை
- சமத்துவம்
- கல்வி
விடை : கல்வி
25.தனியுரிமைக்கான உரிமையை அடிப்படை உரிமையாக அறிவித்த ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு கீழ்க்கண்டவர்களில் யார் தலைமை தாங்கினார்?
- ஜேஎஸ் கேஹர்
- தீபக் மிஸ்ரா
- ஹெச்ஜே கனியா
- டிஎஸ் தாக்கூர்
விடை : ஜேஎஸ் கேஹர்
26. சுதந்திரத்திற்கான உரிமைகளில் முதன்மையான உரிமை ________ ஆகும்.
- வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமை
- தடுப்புக் காவல்
- ஒன்று கூடும் சுதந்திரம்
- பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை
விடை : வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமை
27. பின்வரும் நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமையை முதலில் வழங்கிய நாடு எது?
- பிரான்ஸ்
- அமெரிக்கா
- ஆஸ்திரேலியா
- யுகே
விடை : ஆஸ்திரேலியா
28. அரசியலமைப்பின் பின்வரும் சரத்துகளில், சமத்துவ உரிமை எதில் குறிப்பிடப்பட்டுள்ளது?
- சரத்துகள் 19 – 22
- சரத்துகள் 23 – 24
- சரத்துகள் 14 – 18
- சரத்துகள் 25 – 28
விடை : சரத்துகள் 14 – 18
TNPSC Group 4 Syllabus Pdf in Tamil
29.இந்திய அரசியலமைப்பின் சரத்து – 21 உரிமைகள்
- மத சுதந்திரத்திற்கான உரிமை
- சமத்துவத்திற்கான உரிமை
- வாழ்வுரிமை
- அரசியலமைப்பு தீர்வுகளுக்கான உரிமை
விடை : வாழ்வுரிமை
30. ’சமத்துவ உரிமை ‘யின் கீழ் எவ்வளவு சரத்துகள் வருகின்றன?
விடை: 5
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |