இந்திய தண்டனை சட்டம் 308 | Ipc 308 In Tamil

Advertisement

Ipc 308 In Tamil

இன்றைய கால கட்டத்தில் குற்றங்கள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதனை குறைப்பதற்காக சட்டங்கள் உள்ளது. ஒவ்வொரு குற்றத்திற்கும் சட்டத்தில் தண்டனை இருக்கிறது. அதனை பற்றிய புரிதல் நம்மிடம் இல்லை. அதனால் தான் நம் பதிவில் சட்டம் பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஐபிசி 108 பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

Ipc 307 in Tamil:

326 ipc in Tamil

ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்த வேண்டும் என்றநோக்கத்துடன் அல்லது தன் செயலால் அத்தகைய மரணம் ஏற்படும் என்ற தெளிவுடன் செய்யப்பட்டால், அது கொலைக் குற்றம் செய்வதற்கான முயற்சி என்று முடிவாக்கப்படுகிறது. இதற்கு சிறை காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

அந்த குற்ற முயற்சியால் யாருக்காவது காயம் ஏற்பட்டால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அல்லது இதற்குமுன் சொல்லப்பட்டதைப்போல சிறைக்காவல் தண்டனை விதிக்கப்படும். இந்த பிரிவின் கீழ் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் காவலில் இருக்கும் பொழுது குற்றம் புரிந்து, அதனால் யாருக்காவது காயம் நேரிட்டால் அந்த கைதிக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

தண்டனை சட்டம் 64 மற்றும் 66-ன் படி உள்ள குற்றங்கள் என்னென்ன..?

எடுத்துக்காட்டு: ஒரு குழந்தையைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை யாருமில்லாத ஓர் இடத்தில் போட்டு விடுகின்றனர். அதனால் அந்தக் குழந்தை மரணம் அடையா விட்டால், குழந்தையை அங்கே போட்டவன், இந்தப் பிரிவின் கீழ் குற்றவாளியாகிறான்.

தண்டனை:

  • குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை
  • அல்லது ஆயுள் தண்டனை
  • அபராதம் கூட விதிக்கலாம்
  • செயல் எந்த அளவுக்கு கடுமையாக இருக்கிறதோ, அதைப் பொறுத்து தண்டனை அதிகரிக்கலாம்

முக்கிய அம்சங்கள்:

  • கொள்ளும் நோக்கம் இருக்க வேண்டும்
  • அந்த செயல் பயங்கரமானதாக இருக்க வேண்டும்
  •  பாதிக்கப்பட்ட நபர் உயிருடன் இருந்தாலும், 307 IPC-க்கு உட்படும்.

IPC 308 In Tamil:

IPC 147 in Tamil

ஒருவன் ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக ஒருவருக்கு மரணத்தை உண்டாக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அல்லது அத்தகைய மரணம் உண்டாகும் என்ற தெளிவுடன் அந்தக் காரியம் செய்கின்றான்.  மரணம் ஏற்படுவதற்காக முயற்சி செய்ததற்காக 3 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

அந்தக் காரியத்தின் விளைவாக யாருக்காவது காயம் ஏற்பட்டால், குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

எடுத்துக்காட்டு: ஒருவரை கோவத்தில் திடீரென்று சுடுகிறார் என்று வைத்து கொளவோம். அதனால் மரணம் ஏற்பட்டால், சுட்டவர் மீது கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவிக்கும் குற்றம் சாட்டப்படும். ஆகவே, மரணம் நிகழாதபோது சுட்டவர் மீது, மரணத்தை விளைவிக்க முயற்சிசெய்தது குற்றமாகும்.

தண்டனை:

  • அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை
  • அல்லது அபராதம்
  • அல்லது இரண்டும் சேர்த்து வழங்கலாம்
  • குற்றம் மிக தீவிரமாக இருந்தால், 7 ஆண்டுகள் வரை சிறை வழங்கலாம்

முக்கிய அம்சங்கள்:

  • கொல்லும் நோக்கம் இருக்க வேண்டும், ஆனால் அது தீவிரமானதாக இல்லாமல் இருக்கலாம்.
  • உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்க வேண்டும், ஆனால் அந்த நபர் இறக்காமல் இருக்க வேண்டும்.
  • குற்றம் பரிசீலனை செய்யப்பட்ட பிறகு, நீதிமன்றம் தண்டனை விதிக்கும்.

இந்தியாவில் மோட்டார் வாகன சட்டங்கள்….

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Law 
Advertisement