சாலை பாதுகாப்பு சட்டம் | Road Safety Laws
வீட்டை விட்டு வாகனத்தில் புறப்படும்போது, “பத்திரமாக சென்று வாருங்கள்” என்று கூறுகிறோம். ஆனால் “கட்டாயம் ஹெல்மெட் அணியுங்கள், வேகமாக செல்லாதீங்கள், சாலை விதிகளை கடைப்பிடியிங்கள்” என அறிவுறுத்துவது ஒரு சிலரே. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயதுவரம்பு இல்லாமல் வாகனத்தை ஓட்டுகின்றனர். யாருக்கும் சாலை விதிகளை பற்றி விழிப்புணர்வு இல்லை என்று கூறுவது சரியல்ல. யாரும் விதிகளுக்கு கட்டுப்படுவது இல்லை என்பதே உண்மை. கடுமையான தண்டனைகள் விதித்தாலும் நாம் அதற்கு கட்டுப்படுவது இல்லை காரணம், நேரமின்மை. இந்த அவசர உலகத்தில் நாம் பயணிக்கும் போது அந்த விதிகளை கடைபிடிக்க தவறுகின்றோம். இதனால் பல இழப்புகளை சந்திக்க வேண்டி வரும். வரும் காலங்களில் முக்கியான சாலைவிதிகளை கடைபிடிப்பதன் மூலமாக நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் பாதுகாப்போம். வாருங்கள் இன்று சாலை பாதுகாப்பு சட்டம் பற்றி தெரிந்து கொள்வோம்.
தமிழகம் தான் இந்தியாவில் சாலைவிபத்துகளில் முதலிடம் வகிக்கிறது. வளர்ச்சியில் முதலிடத்தில் இருக்க வேண்டும் ஆனால் விபத்துக்களில் முதலிடத்தில் இருக்கின்றோம் என்பது வேதனைக்குறியது.
இந்தியாவில் மோட்டார் வாகன சட்டங்கள்:
மோட்டார் வாகன திருத்த சட்டம் 2019:
மோட்டார் வாகன திருத்த சட்டம் 2019, போக்குவரத்து விதிமீறல்கள், பழுதடைந்த வாகனங்கள் மற்றும் வயது குறைந்த ஓட்டுநர்கள் போன்றவற்றிற்கான அபராதங்களை அதிகரித்தது.
இந்த மோட்டார் வாகன திருத்த சட்டம் 2019 சட்டம் மோட்டார் வாகன விபத்துக்கு இழப்பீடு வழங்குகிறது.
மோட்டார் வாகன திருத்த சட்டம் 2019 இந்தியாவில் உள்ள அனைத்து சாலை பயனர்களுக்கும் சில வகையான விபத்துக்களுக்கு கட்டாய காப்பீடு வழங்குகிறது.
சாலை போக்குவரத்து சட்டம் 2007:
இந்த சட்டத்தின் படி எந்த ஒரு நபரும் பொதுவான கூரியர் சேவை வணிகத்தில் ஈடுபட கூடாது.
தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாடு (நிலம் மற்றும் போக்குவரத்து) சட்டம் 2000:
இந்தச் சட்டம் தேசிய நெடுஞ்சாலைகள், வலதுபுறம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள நிலத்தின் கட்டுப்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் இந்த சாலைகளில் சட்டவிரோதமாக கையகப்படுத்துவதை நீக்குகிறது.
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையச் சட்டம் 1998:
NHS மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது தற்செயலான விவகாரங்களை மேம்படுத்துதல், பராமரித்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றுக்கான அதிகாரத்தை சட்டம் நிறுவுகிறது.
The Motor Vehicles (Amendment) Act, 2019:
இந்தியாவில் இரு சக்கர வாகன ஓட்டிகள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய இரண்டு முதன்மை சாலை பாதுகாப்பு விதிகள்:
ஹெல்மெட் அணிவது – நீண்ட நேரம் ஹெல்மெட் அணிவது சில நேரம் அசௌகரியமாக இருக்கலாம், ஆனால் கீழே விழும் போது ஏற்படும் மோதல்களில் இருந்தும், அதிவேக சவாரி செய்யும் போது பலத்த காற்றிலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.
பாதைகளுக்கு இடையில் பாதைகளை மாற்றுவதைத் தவிர்க்கவும்.
சில முக்கியமான சாலை பாதுகாப்பு விதிகள்:
வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
நீங்கள் பின் இருக்கையில் இருந்தாலும் எப்போதும் உங்கள் சீட் பெல்ட் அணியுங்கள்.
மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது.
அதிவேகமாக வாகனத்தை ஓட்டக்கூடாது.
சாலைகளில் செல்லும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பாதசாரிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
சாலைகளை கடக்கும் போது கவனம் தேவை.
எப்போதும் ஹெல்மெட் அணிந்து, சீட் பெல்ட்டைக் கட்டுங்கள்.
அபராதங்கள்:
ஒழுங்கில்லாத முறையில் வாகனம் ஓட்டுபவருக்கு ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்படுகிறது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்படுகிறது.
அதிக வேகமாக வாகனம் ஓட்டுபவருக்கு ரூபாய் 1,000 முதல் ரூ பாய் 6,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |