2023 ஆண்டில் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய Excel Shortcuts Keys!!!

Advertisement

Excel Shortcut Keys in Tamil

வளர்ந்து வரும் இந்த காலமானது கணினி காலமாக மாறிவிட்டது. எங்கும் கணினி எதிலும் கணினி என்னும் நிலைமை வந்துவிட்டது.  தற்போது அனைத்து வேலைகளிலும் கணினி பயன்பாடுதான் அதிகமாக உள்ளது. படிப்பு முதல் வேலை வரை அனைத்திலும் கணினி தான். பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை கணினியினை வேலை செய்வதற்கும், படிப்பதற்க்கும் பயன்படுத்தி வருகின்றனர். நம் வாழ்க்கையில் கணினியானது ஒரு முக்கிய அங்கம் வகுக்கிறது.

கணினி வேலைகளில் நாம் அதிகம் பயன்படுத்துவது Excel தான். எக்செலில் உங்கள் வேலைகளை ஈஸியாக முடிக்க பல Shortcut  Keys இருக்கின்றன. இந்த Shortcut  Keys உங்கள் வேலையினை விரைவாக முடிக்க உதவும். இப்பதிவில் பார்க்க இருப்பது உங்கள் வேலையினை ஈஸியாக முடிக்க உதவும்  Excel Shortcut Keys பற்றித்தான்!!!

ms excel shortcut keys in tamil

👉Excel-யில் இது கூட தெரியாம இருக்குறது ரொம்ப தப்புங்க..!

 

S.  No Excel Shortcuts (Description)

 பணிபுத்தக குறுக்கு வழிகள்
(Workbook Shortcut Keys)

1 Ctrl + N புதிய பணிபுத்தகத்தை (Work Book) உருவாக்க
2 Ctrl + O ஏற்கனவே உள்ள பணிபுத்தகத்தை(Work Book) திறக்க
3 Ctrl + S பணிபுத்தகத்தை(Work Book) சேமிக்க
4 Ctrl + W தற்போதைய பணிபுத்தகத்தை மூட
5 Ctrl + F4 எக்செலை(Excel) மூடுவதற்கு
6 Ctrl + Page Down அடுத்த எக்செல் தாளுக்கு(Excel Sheet)   செல்ல
7 Ctrl + Page Up முந்தைய எக்செல் தாளுக்கு (Excel Sheet) செல்ல
8 Alt + A டேட்டா டேப் மெனுவைக் காட்ட ALT + A கீ உதவுகிறது.
9 Alt + W ALT + W கீ View tab மெனுவைக் காண்பிக்க உதவுகிறது.
10 Alt + M ஃபார்முலா (Formula) தாவலுக்கு செல்ல

செல் வடிவமைப்பு குறுக்கு வழி விசைகள்
(Cell Formatting Shortcut Keys)

11 F2 செல்லை (Cell) எடிட் செய்ய
12 Ctrl + C செல்களை Copy செய்ய
13 Ctrl + V செல்களை Paste செய்ய
14 Ctrl + I எழுத்துக்களை சாய்வு படுத்த
15 Ctrl + B  எழுத்துக்களை தடினமாக(Bold) மாற்ற
16 Alt + H + A + C செல்லில் உள்ள கன்டென்ட்யை மையமாக சீரமைக்க
17 Alt + H + H வண்ணத்தை(Color) நிரப்ப
18 Alt + H + B ஒரு பார்டர்(Border) சேர்க்க
19 Ctrl + Shift +_ அவுட்லைன் பார்டரை அகற்ற
20 Ctrl + Shift + & தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களுக்கு(Cells) அவுட்லைன் சேர்க்க
21 Tab அடுத்த செல்லுக்கு(Cell) நகர
22 Shift + Tab முந்தைய செல்லுக்கு(Cell) தாவ
23 Ctrl + Shift + Right arrow(வலது அம்புக்குறி) வலது புறத்தில் உள்ள அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்க
24 Ctrl + Shift + Left Arrow(இடது அம்புக்குறி) இடது புறத்தில் உள்ள அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்க
25 Ctrl + Shift + Down Arrow(கீழ் அம்புக்குறி) தேர்ந்தெடுக்கப்பட்ட செல்லில் இருந்து அட்டவணையின் இறுதிவரை உள்ள நெடுவரிசையை தேர்ந்தெடுக்க
26 Ctrl + Shift + Up Arrow(மேல் அம்புக்குறி) தேர்ந்தெடுக்கப்பட்ட செல்லிற்கு மேலே உள்ள அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்க
27 Ctrl + Shift + Down Arrow(கீழ் அம்புக்குறி) தேர்ந்தெடுக்கப்பட்ட செல்லிற்கு கீழே   உள்ள அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்க
28 Shift + F2 செல்லில் கருத்தை(Comment ) சேர்க்க
29 Shift + F10 + D செல் கருத்தை நீக்க
30 Ctrl + H கண்டுபுடி  மற்றும் பதிலாக காட்ட(To display find and replace)
31 Ctrl + Shift + L (or) Alt + Down Arrow பில்டர்(Filter) செயல்படுத்த
32 Ctrl + ; தற்போதைய தேதியை செருக
33 Ctrl + Shift + : தற்போதைய நேரத்தினை செருக
34 Ctrl + K ஹைப்பர்லிங்கை செருக
35 Ctrl + Shift + $ நாணய வடிவத்தை( Currency Format) பயன்படுத்துவதற்கு
36 Ctrl + Shift + % சதவீத வடிவத்தை(Percentage Format) பயன்படுத்துவதற்கு
37 Alt + Q எக்செலில் நீங்கள் என்ன செய்ய  விரும்புகின்றீர்களோ அதனை தேடும் பெட்டிக்கு செல்ல

வரிசை மற்றும் நெடுவரிசை வடிவமைத்தல் குறுக்குவழி விசைகள் 
(Row and Column Formatting Shortcut Keys)

38 Shift + Space முழு வரிசையையும் தேர்தெடுக்க
39 Ctrl + Space முழு நெடு வரிசையையும் தேர்தெடுக்க
40 Alt + H + D + C ஒரு நெடு வரிசையை நீக்க
41 Shift + Space, Ctrl + – ஒரு வரிசையை நீக்க
42 Ctrl + 9 தேர்ந்தெடுக்கப்பட்ட வரிசையை மறைக்க
43 Ctrl + Shift + 9 தேர்ந்தெடுக்கப்பட்ட வரிசையை மறைக்க
44 Ctrl + 0 தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுவரிசையை மறைக்க
45 Ctrl + Shift + 0 தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுவரிசையை மறைக்க
46 Alt + Shift + Right arrow(வலது அம்புக்குறி) வரிசைகள் அல்லது நெடுவரிசைகளை குழுவாக்க
47 Alt + Shift + Left arrow(இடது  அம்புக்குறி) வரிசைகள் அல்லது நெடுவரிசைகளை பிரிக்க

பிவோட் டேபிள் ஷார்ட்கட் கீகள்

(Pivot Table Shortcut Keys)

48 Alt + Shift + Right arrow(வலது அம்புக்குறி) பிவோட் அட்டவணை உருப்படிகளை(items) குழுவாக்க?(Group)
48 Alt + Shift + Left arrow(இடது  அம்புக்குறி) பிவோட் அட்டவணை உருப்படிகளை  குழுவிலக்க(Ungroup)
50 Ctrl + – பிவோட் அட்டவணை உருப்படிகளை மாற்ற
51 Alt + F1 ஒரே ஷீட்டில் பிவோட் விளக்கப்படத்தை உருவாக்க
52 F11 புதிய ஒர்க் ஷீட்டில் பிவோட் சார்ட்டை உருவாக்க

 

👉Excel-யில் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான Formula!!

இது பொது கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் கல்வி
Advertisement