தமிழ் உயிர் எழுத்துக்கள் | Uyir Eluthukkal in Tamil..!
நாம் அனைவரும் பிறந்த உடனே பேசுவதோ அல்லது அழுதுவதோ கிடையாது. ஏனென்றால் அப்போது நம் மழலை பருவத்தில் தான் இருக்கின்றோம். அதன் பிராகி அதிகப்பட்சம் 1 வயது ஆவது பூர்த்தி அடைந்த பிறகு தான் பேசவே குழந்தைகள் ஆரம்பிக்கும். அவ்வாறு பேச ஆரம்பிக்கும் போதும் சரி, பள்ளியில் படிக்க ஆரம்பிக்கும் போதும் சரி முதலில் படிக்கும் எழுத்து என்னவோ அ என்ற எழுத்தாக தான் உள்ளது. இந்த அ என்ற எழுத்து ஆனது தமிழில் காணப்படும் எழுத்துக்களில் முதல் உயிர் எழுத்துக்கள் ஆகும்.
அந்த வகையில் திருவள்ளுவரும் அவர் எழுதிய முதல் திருக்குறளை கூட அகர முதல எழுத்தெல்லாம் என்று தான் ஆரம்பித்து இருக்கிறார். இவ்வாறு இருக்கும் உயிர் எழுத்துக்கள் வெறும் 1 எழுத்தினை மட்டும் கொண்டுள்ளாமல் மொத்தம் 12 வகையான எழுத்துக்களை கொண்டுள்ளது. ஆகவே உயிர் எழுத்துக்கள் என்ன என்பதையும் அதில் உள்ள வகைகள் என்ன என்பதையும் பார்க்கலாம் வாங்க.!
உயிர் எழுத்துக்கள் எத்தனை | உயிர் எழுத்துக்கள் 12
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை அனைத்துமே உயிர் எழுத்துக்கள் ஆகும். ஆகவே உயிர் எழுத்துக்கள் மொத்தமாக 12 உள்ளது.
உயிர் எழுத்துக்கள் என்றால் என்ன..?
உயிரெழுத்து என்பது பெயர்ச்சொல் என்ற இலக்கண வகையினைச் சார்ந்ததாகும். ஒரு மொழியின் முதன்மையான எழுத்துக்களை, உயிர் எழுத்துக்கள் என்கிறோம்.
யாரையும் சார்ந்து இல்லாமல் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என இவ்வாறு தனித்துவமாக ஒலிக்கும் தன்மை கொண்ட வரி வடிவங்களே உயிர் எழுத்துக்கள் ஆகும். இதுவே தமிழ் உயிர் எழுத்துக்கள் எனப்படும்.
a, e, i, o, u ஆகிய 5 எழுத்துக்களும், ஆங்கிலத்தின் உயிர் எழுத்துக்கள் ஆகும்
Uyir Eluthukkal in Tamil | Tamil Uyir Eluthukkal Words List:
எழுத்து | சொல் | பெயர் |
அ | அம்மா | அகரம் |
ஆ | ஆடு | ஆகாரம் |
இ | இலை | இகரம் |
ஈ | ஈசல் | ஈகாரம் |
உ | உணவு | உகரம் |
ஊ | ஊஞ்சல் | ஊகாரம் |
எ | எறும்பு | எகரம் |
ஏ | ஏணி | ஏகாரம் |
ஐ | ஐவர் | ஐகாரம் |
ஒ | ஒட்டகம் | ஒகரம் |
ஓ | ஓடம் | ஓகாரம் |
ஒள | ஒளவையார் | ஒளகாரம் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |