Smart Phones in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! பெரும்பாலும் நாம் வாழும் இன்றைய காலகட்டம் ஸ்மார்ட் போனில் தான் இயங்கி கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வளவு ஏன் குழந்தைகள் கூட ஸ்மார்ட் போனில் பூந்து விளையாடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் நாம் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்க செல்லும் வரை ஸ்மார்ட் போனுடன் தான் நேரத்தை செலவிடுகின்றோம்.
அப்படி நம் வாழ்வில் அதிகமாக பயன்படுத்தும் ஸ்மார்ட் போனை வாங்கும் போது என்ன போன் வாங்கலாம், இந்த போனை வாங்கினால் எத்தனை வருடம் வரை நன்றாக இருக்கும், ஸ்மார்ட் போன் கம்மியான விலையில் கிடைக்குமா என்று பல கேள்விகள் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கும். அதனால் இன்று இந்த பதிவின் மூலம் 10 ஆயிரம் ரூபாயில் கிடைக்கும் அருமையான ஸ்மார்ட் போன்கள் பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Moto G13:
பல சிறப்பம்சங்களை கொண்ட Moto G13 போனானது ஏப்ரல் 15, 2023 அன்று இந்தியாவில் Flipkart இல் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த Moto G13 போன் 6.5 இன்ச் டிஸ்ப்ளே HD+ Resolution , மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள் என்று பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. நம் இந்தியாவில் இந்த Moto G13 போனின் விலை 9,999 முதல் தொடங்குகிறது.
Yuva 2 Pro Lava:
இந்த லாவா யுவா ஸ்மார்ட் போனானது 6.5 இன்ச் HD+ நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர், 13MP பிரைமரி கேமராவுடன் இரு VGA கேமராக்கள், 5MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் அடாப்டர் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. அதுபோல இந்த Yuva 2 Pro Lava போனின் ஆரம்ப விலையானது 7,999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.
👉 இவ்வளவு சிறப்பம்சம் கொண்ட Vivo Y16 மொபைல் போன் 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கலாமா
Moto E13:
இந்த போனானது 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் யுனிசாக் டி606 பிராசஸர், மாலி G57 MP1 GPU, அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 13MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த மோட்டோ E13 போனின் ஆரம்ப விலையானது 6,999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.
Redmi 9 மொபைல் போனை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி அறிந்து கொள்ளுங்கள் |
இதையும் படித்துப்பாருங்கள்=> 2023 -ல் இளைஞர்களை கவர வந்துவிட்டது…இந்த 5G ஸ்மார்ட் போன்..! அது என்னானு தெரிஞ்சுக்கோங்க..!
மேலும் இது தொடர்பான பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Mobile |