Arugampul Multi Purpose
நாம் வணங்கும் விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சூட்டி வழிபடும் பழக்கம் நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இத்தகைய அருகம்புல்லினை வெறும் வயிற்றில் ஜூஸ் போல செய்து குடிப்பார்கள். எதனால் நாம் அருகம்புல் ஜூஸ் குடிக்கிறோம் என்றால் அதற்கான முதல் காரணம் உடல் எடை குறைப்பதற்காக தான். ஆனால் அருகம்புல் வெறும் ஜூஸாக மட்டும் நமக்கு பயன்படவில்லை. ஏனென்றால் எந்த ஒரு பொருளும் பலநோக்கு திறனை அளிக்கும் வல்லமை பெற்று இருக்கிறது. ஆனால் நமக்கு தான் இவற்றை பற்றிய திறன் எல்லாம் புரிவது அல்லது தெரிவது இல்லை. அதனால் இன்று மூலிகைகளில் பெயர் பெற்ற அருகம்புல்லின் Multi Purpose பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.!
Information about Arugambul:
நமக்கு தெரிந்த மூலிகையின் வரிசையில் அருங்கம்புல்லும் ஒன்றாகும். இத்தகைய அருகம்புல் ஆனது Poaceae என்ற குடும்பத்தினையும் சைனோடான் என்ற இனத்தினை சேர்ந்தவை ஆகும்.
மேலும் இது பெரும்பாலும் உலக நாடுகள் அனைத்திலும் காணப்படுகிறது. அருகம்புல் 2 மீட்டர் வேர் அமைப்புடனும், தண்டுகள் 1 முதல் 30 செ.மீ உயரமும், 2 முதல் 15 செ.மீ வரை நீளமும் கொண்டது ஆகும்.
இதனுடைய தாயகம் என்று பார்த்தால் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா என இவை அனைத்தும் அடங்கும்.
இது 30° S மற்றும் 30° N அட்சரேகைக்கு இடைப்பட்ட வெப்பமான சூழ்நிலையில் வளரும் தன்மை கொண்டது.
அருகம்புல் ஜூஸ் நன்மைகள்:
காலையில் வெறும் வயிற்றில் நாம் அருகம்புல் ஜூஸ் குடிப்பதன் மூலமாக செரிமான கோளாறு, ஆஸ்துமா, வயிற்று வலி, வயிற்று போக்கு மற்றும் தோலில் ஏற்படும் அலர்ஜி ஆகிய பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.
மேலும் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் சர்க்கரை நோயினை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும், சிறுநீரக கல் பிரச்சனையில் இருந்து விடுபட செய்து ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ உதவி செய்கிறது.
அதுமட்டும் இல்லாமல் இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்து ஆனது எலும்புகளை பலம்பெற செய்யவும் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலியில் இருந்தும் விடுபட செய்கிறது.
உங்க வீட்டு பக்கத்துல நொச்சி இருக்கா.. அப்போ நொச்சி பற்றிய இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க |
அருகம்புல் பொடி பயன்கள்:
- வாதம்
- வாயு கோளாறு
- புற்றுநோய்
- உடல் சூடு
- பசியின்மை
- நீண்ட நாளாக இருக்கும் சளி பிரச்சனை
- பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல்
அருகம்புல்லில் இருந்து தயாரிக்கப்படும் பொடியானது மேலே சொல்லப்பட்டுள்ள பிரச்சனைகளை குணப்படுத்துவதோடு மட்டும் இல்லாமல் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியினை சரி செய்கிறது.
சருமத்திற்கு அருகம்புல்:
பச்சை அருகம்புல்லினை அரைத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து கலந்து உடம்பில் சிரங்கு, அரிப்பு, படர்தாமரை மற்றும் வியர்குரு இடங்களில் தடவி வந்தால் விரைவில் இதில் இருந்து நல்ல பலன் கிடைக்கும்.
சமையலில் அருகம்புல்:
- அருகம்புல் பாயாசம்
- அருகம்புல் ரசம்
- அருகம்புல் சட்னி
- கஷாயம்
- லட்டு
- ஜூஸ்
எனவே நம்முடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் அருகம்புல்லில் இத்தனை விதமான பல்நோக்கு திறன்கள் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
இதையும் படியுங்கள்⇒ உங்க வீட்ல ஓமவல்லி செடி இருக்கா.. அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |