ரயில் பயணிகள் கவனத்திற்கு
அனைவரும் குழந்தை பருவத்தில் நிறைய விளையாட்டினை விளையாடி இருப்போம். அத்தகைய விளையாட்டுகளில் ரயில் விளையாட்டும் ஒன்று. அதுவும் சிறிய வயதில் இருக்கும் போது எல்லாம் ரயிலில் பயணம் செய்யப்போகிறோம் என்று தெரிந்தால் போதும் நமக்கு சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். அப்போது எல்லாம் நமக்கு ரயிலில் உள்ள விதிகள் எல்லாம் தெரியாது. ஆனால் காலப்போக்கில் நாம் வளர்ந்து பெரியவர்களாக மாறி பின்பு அதில் பயணம் செய்யும் போது தான் தெரியும் சாதாரணமாக அதில் ஒரு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றால் கூட அதற்கு என்னென்ன விதிகள் உள்ளது என்று. ரயில் பயணத்தில் பயணிகளுக்கு என்று நிறைய விதிமுறைகள் இருந்தாலும் கூட ரயில்வே நிலையமானது சில சலுகைகளையும் பயணிகளுக்கு அளித்து வருகிறது. அந்த வகையில் இப்போது ஒரு புதிய அறிவிப்பும் அறிவித்துள்ளது. ஆகையால் அத்தகைய அறிவிப்பு என்னவென்று ரயில் பயணிகள் அனைவரும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
மாற்றுத்திறனாளி ரயில் சலுகைகள்:
ரயில் பயணம் என்பது ஒற்றை சொல்லில் இருந்தாலும் கூட அதில் சிறியவர்கள், பெரியவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என நிறைய நபர்கள் வருவார்கள்.
பயணம் செய்யும் அனைவருக்கும் ஒரே மாதிரியான விருப்பங்கள் இருக்கும் என்று கூறமுடியாது. ஏனென்றால் நீண்ட தூரம் பயணம் செய்யப்போகிறோம் என்றால் பெரும்பாலான மக்கள் ரயிலில் அவர்கள் தூங்குவதற்கு ஏற்ற மாதிரியான ஒரு இடத்தினை தான் விரும்புவார்கள்.
நாம் டிக்கெட் பெரும் போது சில நேரத்தில் லோபெர்த், மிடில் பெர்த் போன்றவற்றை கிடைக்காது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் போன்றவர்களுக்கு இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தது.
இதையும் படியுங்கள்⇒ இனி இவர்களுக்கு எல்லாம் ரயில் கட்டணத்தில் தள்ளுபடியாம் தெரியுமா..
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ரயில்வே நிலையமானது முன்னதாக 45 வயதிற்குள் மேல் உள்ள பெண்கள் அனைவருக்கும் லோபெர்த் கிடைக்கும் என அறிவிப்பினை அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து இப்போது ரயில்வே வாரியமானது மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி ஒரு குட் நியூஸினை தெரிவித்துள்ளது. அது என்னவென்றால் விரைவு ரயிலில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ் பெர்த்தும், அவருடன் வரும் உதவியாளருக்கு நடுநிலை பெர்த்தும் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறியுள்ளது.மேலும் எகானமி AC மற்றும் AC பிரிவுகளில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதே போல ஒரு கீழ் பெர்த்தும் மற்றும் அவருடைய உதவியாளருக்கு ஒரு நடுநிலை பெர்த்தும் அளிக்கப்பட வேண்டும் என்று அனைத்து ரயில்வே மணடலங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தகைய உரிமையினை பெற நீங்கள் டிக்கெட் பெறுவதற்கான படிவத்தில் மாற்றுத்திறனாளி என்பதை தேர்வு செய்தால் போதுமானது.
இதையும் படியுங்கள்👇👇
வருகிறது ரேஷன் கடைகளில் மாற்றம்.. மக்களுக்கு தான் அடிக்கிறது லக்..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |