Sbi Whatsapp Banking Services Details in Tamil
வங்கிக்கு செல்வது என்றால் மிகவும் கஷ்டமாக இருக்கும், காரணம் அங்கு ஒரு செய்தியை பற்றி கேட்கப்போகிறோம் என்றால் அதற்கு பல மணி நேரம் ஆகும். அன்று ஒருநாள் வேலைகள் கெட்டுவிடும். அதனாலேயே பாதி மக்கள் வங்கிக்கு செல்வது என்றால் மிகவும் பயம் கொள்கிறார்கள். ஆனால் தொழில்நுட்பம் மாறிவிட்டது, பணப்பரிவர்த்தனை செய்யவேண்டும் என்றால் அதற்கும் வங்கிக்கு செல்வோம்.
ஆனால் கொஞ்ச காலமாக அனைத்தையும் ATM மூலம் பணப்பரிவர்த்தனை மற்றும் பேலன்ஸ் செக் செய்கிறது என்று அத்தியாவசிய தேவைகளை ATM மூலம் செய்து கொண்டு வருகிறோம். இப்போது தொழிநுட்பம் நிறைய மாறிவிட்டது. இப்போது நிறைய விஷயங்களை போன் மூலம் அதாவது உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்சப் மூலம் அனைத்து செய்தியையும் தெரிந்து கொள்ள முடியும். அதிலும் 9 அம்சங்களை உள்ளடக்கியது. சரி வாட்சப் மூலம் சேவையை வைத்து நமக்கு என்ன உதவிகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க..!
How to Use Sbi Whatsapp Banking in Tamil:
SBI வங்கி சேவையை பயன்படுத்த வங்கியில் பதிவு செய்யபட்ட எண்ணிலிருந்து வாட்ஸ்அப்பில் 909022690226 இந்த நம்பருக்கு ஹாய் என்று SMS அனுப்ப வேண்டும். அதன் பின் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் Chatbot தொடங்கும். அதன் மூலம் நீங்கள் வழிமுறைகளை பின்பற்றி உங்களுக்கு தேவையான செய்திகளை பெற்றுக் கொள்ளலாம்.
வாட்சப் மூலம் நீங்கள் கடைசி 5 கணக்கு இருப்பு நிலைகளை பற்றி மினி ஸ்டேட்மன்ட் மூலம் பெறமுடியும்.
சேமிப்பு கணக்கு, வைப்புநிதி, கால வைப்பு, ஓய்வூதிய தகவல் பற்றிய அனைத்து தகவல் மற்றும் வட்டி விகிதங்கள் இதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
வங்கி கடை பற்றிய வட்டி விகிதம் பற்றி தெரிந்து கொள்ளலாம். அதாவது வீட்டுக் கடன், கார் கடன், தங்கக் கடன், தனிநபர் கடன், கல்விக் கடன் என அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு NRE கணக்கு, NRO கணக்கு மற்றும் அதற்கான வட்டி விகிதங்கள் பற்றி தெரிந்து கொள்ள முடியும் அதுவும் நொடிப்பொழுதில்.
உடனடியாக வங்கி கணக்கு தொடங்க அதற்கான தகுதிகள் அதற்கு தேவைப்படும் ஆவணம் என அனைத்து கேள்விகளுக்கும் சேவைகளை நொடி பொழுதில் கிடைக்கும்.
வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தின் தொடர்பு எண்கள் மற்றும் குறைகளைத் தீர்ப்பதற்கான உதவி எண்களை கூட தெரிந்து கொள்ள முடியும்,
அதேபோல் மேலும் உங்களுக்கு ஏதேனும் கடன் வழங்கப்படுவதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றால் அதற்கு சம்பந்தப்பட்ட தகவல்களை தனிநபர் கடன், கார் கடன், இரு சக்கர வாகனக் கடன் குறித்த தகவல்களும் அனுப்பப்படும்.
அக்கவுண்ட் பேலன்ஸ், வாட்ஸ்அப் பேங்கிங் பதிவுகள் ஆகிய வசதிகள் இங்கு கிடைக்கும்.
அது மட்டும் இன்றி பரிவர்த்தனை குறித்த சுருக்கமான தகவல்களும் வாட்சப் மூலம் பெறலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 நீங்கள் கனரா வங்கி வாடிக்கையாளரா..! அப்படினா நீங்கள் உடனே படித்து தெரிந்துகொள்ளுங்கள்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
100 நாள் வேலை திட்டத்தில் சில அதிரடி மாற்றம் செய்த மத்திய அரசு..!
காய்கறி மலர் பழ பயிர்கள் சாகுபடிக்கு அரசு தோட்டக்கலை துறை வழங்கும் 40% மானியம்..!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |