என்ன சொல்லுறீங்க..! ஒரே ஒரு கேரி பேக்கின் விலை 1,700 ரூபாயா.. போறபோக்க பாத்த கேரி பேக் வாங்கவே லோன்தான் போடணும் போலிருக்கே..!

Advertisement

Subaru Carry Bag Price and Production Details in Tamil

பொதுவாக நாம் பயன்படுத்தும் கார்களில் உள்ள மிகவும் முக்கியமான பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று தான் இந்த ஏர்-பேக். இது கார் விபத்தின் போது தலை, கழுத்து மற்றும் மார்பக பகுதியை பாதுகாக்கும் விதமாக இந்த அம்சம் கார்களில் வழங்கப்படுகின்றது. ஆனால், இந்த அம்சத்தை ஒரே ஒரு முறை விபத்தினால் திறந்துவிட்டால் அது பயனற்றதாக மாறிவிடும். இதனை மீண்டும் பயன்படுத்த முடியாது.

இதனால் நமது உலகில் இந்த ஏர்-பேக்குகளின் கழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது. அதனால் இதனை மறுசுழற்சி செய்து மீண்டும் நம்மால் பயன்படுத்த முடியும். அதுவும் மாத கணக்கில் என்று ஒரு நிறுவனம் செய்து காட்டியுள்ளது. அது என்ன நிறுவனம் மற்றும் அது என்ன பொருள் என்பதெயெல்லாம் அறிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Subaru Carry Bag Production Details in Tamil:

Subaru Carry Bag Production Details in Tamil

உலகில் உள்ள இந்த ஏர்-பேக்குகளின் கழிவுகளை பயன்படுத்தி சுபரு என்னும் நிறுவனம் தான் கேரி பேக்குகளை தயாரித்து உள்ளது. இந்த கேரி பேக்குகளை பல மாதங்களுக்கு தொடர்ச்சியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் நீடித்து உழைக்கும் தன்மைக் கொண்டதாக இருக்கும். இதற்காக சுபரு நிறுவனம் ஜப்பானிய நிறுவனம் ஒன்றுடன் கை கோர்த்து இருக்கின்றது. மேலும் இந்த சுபரு நிறுவனம் டொயோடா கோசை (Toyoda Gosei) என்னும் நிறுவனத்துடனும்  தனது கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது.

இந்த டொயோடா கோசை நிறுவனமானது கார்களுக்கான வெவ்வேறு பாகங்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றது. மேலும் சுபருவின் 20% பங்கை டொயோட்டாவே கையகப்படுத்தி இருக்கின்றது என்பது குறிப்பிடத் தகுந்தது.

இதன் அடிப்படையிலேயே இந்த இரு நிறுவனங்களும் இணைந்திருக்கின்றன. மேலும் இந்த நிறுவனமே கார்களில் பயன்படுத்த முடியாத மற்றும் ஏர்-பேக் கழிவுகளை சுபரு நிறுவனத்திற்கு வழங்க இருக்கின்றது.

இதன் மூலமாக உலகில் தேங்கி இருக்கும் ஏர்-பேக் கழிவுகள் விரைவில் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுபரு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கேரி -பேக்குகள் நைலானால் தயாரிக்கப்படுபவை ஆகும்.

ரேஷன் கடையில் இனி இந்த பொருட்களும் கிடைக்கும் அந்த என்ன பொருள் தெரியுமா

Subaru Carry Bag Price Details in Tamil:

இது நச்சு வாயுக்களால் பாதிப்படையாது. மேலும் இந்த கேரி -பேக்குகள் பல தசாப்தங்களுக்கு நீடித்து உழைக்கும் திறன் கொண்டது. இந்த கேரி -பேக்குகள் விரைவில் சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது விற்பனைக்கு வரும் பட்சத்தில் ரூ. 1,700-க்கு விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இந்த கேரி -பேக்குகள் ஜப்பானில் மட்டுமே விற்பனைக்கு வரும் என்பதும் குறிப்பிட தகுந்தது.

மேலும் இந்த பைகள் வெறும் வெள்ளை நிறத்தில் மட்டுமே விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த கேரி பேக்கின் ஓரத்தில் நீலம் அல்லது இளஞ்சிவப்பு நிற கோடுகளும் இடம் பெற்றிருக்கும்.

இதில் இந்த நிறங்களைப் பயன்படுத்த பிரத்யேக காரணம் ஒன்று இருக்கின்றது. அதாவது சுபரு நிறுவனத்தின் வர்த்தக முத்திரையின் நிறம் நீலம் என்பதாலும், எஸ்டிஐ பெர்ஃபார்மன்ஸ் பிராண்டின் நிறம் இளஞ்சிவப்பு என்பதாலும் அந்த நிறங்கள் மட்டுமே பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள மிகப்பெரிய அப்டேட்

இனி அனைத்து அரசு அலுவலகத்திலும் கைரேகை பதிப்பு இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement