ஏக்கருக்கு 8 ஆயிரம் மானியம் விவசாயிகளுக்கு அறிவிப்பு..! யாரெல்லாம் இதில் பயன்பெறலாம் தெரியுமா..?

Advertisement

விவசாயிகளுக்கு மானியம்

பொதுவாக அரசு பொது மக்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு வருடமும் நிறைய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக விவசாயிகளுக்கு என்று பார்த்தால் நிறைய திட்டங்கள் வந்துள்ளது. அந்த திட்டத்தின் கீழும் விவசாயிகள் அனைவரும் அதில் பயன் அடைந்து தான் வருகின்றனர். ஏனென்றல் ஒரு விவசாயி அவருடைய நிலத்தில் ஒரு பயிரினை பயிர் செய்வது முதல் அறுவடை செய்வது வரை என நிறைய சவாலினை சந்திக்கின்றனர். அந்த வகையில் புதுச்சேரி முதல்வர் அவர்கள் இயற்கை விவசாயம் செய்யும் புதுச்சேரி நபர்களுக்கு குறிப்பிட்ட தொகை மானியமாக வழங்கப்படும் என்று ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பின் மூலம் யாரெல்லாம் பயன் அடையலாம் மற்றும் எவ்வளவு தொகை மானியமாக கிடைக்க உள்ளது என்ற முழு விவரங்களையும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ தமிழக மக்களுக்கு அடுத்தடுத்து வரும் குட் நியூஸ்..! மகிழ்ச்சியில் மக்கள்.. 

விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம்:

ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் பயன்பெரும் வகையில் சில மானிய திட்டங்கள் கொண்டுவரப்படும். அந்த வகையில் இந்த வருடம் புதுச்செரி இயற்கை விவசாயிகளுக்கு அந்த நாட்டின் முதல்வர் ரெங்கசாமி அவர்கள் ஒரு மானிய அறிவிப்பை அறிவித்துள்ளார். 

மேலும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பானது அதிகமான பரப்பளவில் சாகுபடி செய்ய வேண்டும் என்றும் மற்றும் விவசாயத்தின் உற்பத்தியினை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டதாகும்.

பயிரின் பெயர்  இடுபொருள் மானியம்  உற்பத்தி மானியம்  மொத்த மானியம் 
பயிர் சாகுபடி 2,000 ரூபாய் 3,000 ரூபாய் ஏக்கருக்கு 5,000 ரூபாய்
எள் சாகுபடி 2,000 ரூபாய் 3,000 ரூபாய் ஏக்கருக்கு 5,000 ரூபாய்
மணிலா சாகுபடி 3,000 ரூபாய் 5,000 ரூபாய் ஏக்கருக்கு 8,000 ரூபாய்
சிறுதானிய பயிர் சாகுபடி 2,000 ரூபாய் 5,000 ரூபாய் ஏக்கருக்கு 7,000 ரூபாய்

 

இவற்றை எல்லாம் பட்ஜெட்டில் உள்ளது என்றும் விரைவில் நடைமுறைக்கும் வரும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்⇒ ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இன்னும் இணைக்கவில்லையா.. அப்போ நீங்க தான் முதல்ல இதை தெரிஞ்சுக்கனும்.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement