இனி ரேஷன் கடைகளில் அரிசியுடன் இந்த 2 இரண்டு பொருளும் வழங்கப்படும்..!

Advertisement

This Item is Usually Served Along With Rice in The Ration Shop in Tamil

பொதுமக்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்று மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்கு சொல்வதில் மகிழ்ச்சி..! ஒவ்வொரு வருடமும் மக்களுக்கான நிதி பட்ஜெட் ஒத்துக்கீடு செய்வார்கள். இதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தாக்கல் செய்தார்கள்.

இந்நிலையில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வேளாண் பட்ஜெட்களை தாக்கல் செய்து முக்கிய அறிவிப்புகளை தாக்கல் செய்து வருகிறார்கள். அதில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நிறைய திட்டங்கள் உள்ளது. அது என்னவென்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

வேளாண் பட்ஜெட் 2023-24:

 முன்பு ரேஷன் கடைகளில் அரிசி கோதுமை என இன்னும் பல பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து வேளாண் பட்ஜெட் அறிவிப்புகளில் இனி அரிசி கோதுமையுடன் தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.     அதேபோல் ரேஷன் கடைகளில் கேழ்வரகு, கம்பு போன்ற சிறு தானியங்களை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.  

மேலும் சிறுதானியர்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அதேபோல உற்பத்தியாளர் குழுமங்களுக்கு மானியங்கள் வழங்க நடவடிக்கை. விவசாயிகள் தொழல்நுட்பங்களை பற்றி அறிந்துகொள்ள வாட்சப் குழு அமைக்கப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும் தகுதியான குடும்பங்களை கண்டறிவது எப்படி

ஆடு, மாடு வளர்ப்பு போன்ற பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள Rs.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்காக உழவன் சார்ந்த விவரங்களை பற்றி தெரிந்துகொள்ள இணையதளம் உருவாக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான சேவைகள் வழங்க வேளாண் மின்னணு உதவி மையம் 385 வட்டார வளர்ச்சி மையங்கள் திறக்கப்படும்.

சிறு விவசாயிகளுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும் வேளாண்களை பட்ஜெட்களை பற்றி தெரிந்துகொள்ள 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement