இன்று அறிவித்த வேளாண் பட்ஜெட்டின் ஹைலைட்ஸ்..!

Advertisement

வேளாண் பட்ஜெட் 2023 ஹைலைட்ஸ் | TN Agriculture Budget 2023 Highlights

இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், தாக்கல் செய்யப்படும் 2-வது முழுமையான வேளாண் பட்ஜெட் இதுவாகும். இதனை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் தான் வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் உள்ள முக்கிய அறிவிப்புகள் இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

இன்று அறிவித்த வேளாண் பட்ஜெட்டின் ஹைலைட்ஸ்..!

தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு தரிசு நிலங்களை சீர்திருத்தம் செய்தும், மாற்றுப் பயிர் சாகுபடி மூலமாகவும் 50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளவும் சிறுதானிய விவசாயிகளை ஒன்றிணைத்து 100 சிறுதானிய உற்பத்திக் குழுக்களை உருவாக்கி பயிற்சி அளிக்கப்படும்.

12,500 ஏக்கரில் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்க மானியம் அளிக்கப்படும். சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய உதவி அளிக்கப்படும்.

மக்களிடையே சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ‘சிறுதானிய திருவிழாக்கள்’ நடத்தப்படும். வரும் ஆண்டில் ஒன்றிய, மாநில அரசு நிதி உதவியுடன் 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்கள், கல்வி நிலைய விடுதிகளில் சத்துள்ள சிறுதானிய உணவு அளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் வறட்சி, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் பயிர் ரகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்? தகுதியான குடும்பங்களை கண்டறிவது எப்படி?

யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க தனி குழு அமைக்கப்படும்.

நெல்லுக்கு பின்னான பயிர் சாகுபடிக்கு ரூ.24 கோடி மானியம் வழங்கப்படும்.

சம்பா நெல் அறுவடைக்கு பின்னர் சிறுதானியங்கள் பயறு உள்ளிட்ட சாகுபடிகள் செய்ய ஊக்குவிக்கப்படும்.

60 ஆயிரம் சிறு, குறு மற்றும் நிலம் இல்லாத வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் வாங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படும்.

37 மாவட்டங்களில் 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் இடுபொருளுக்கு பணம் இல்லா பரிவர்த்தனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

தென்னை வளர்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தேசிய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் அடைய தென்னை வளர்ச்சி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக 14 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும்.

ரூ.33 கோடி நிதி ஒதுக்கீட்டில் சூரியகாந்தி, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி அதிகரிக்கப்படும்.

பயிர் சாகுபடி முதல் விற்பனை வரையிலான தொழில்நுட்பம் பற்றிய சந்தேகங்களை விவசாயிகளிடம் நேரடியாக விளக்க வட்டாரத்துக்கு ஒரு வேளாண் விஞ்ஞானி நியமிக்கப்படுவார். 3 முதல் 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம் செய்யப்படுவர்.

கருவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க 5 ஆண்டுகளில் 1500 ஹெக்டேரில் செயல்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கரும்பு விவசாயிகளின் நலன் காக்கும் விதமாக சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து பரவலாக்கும் வகையில் 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து, மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

குறைந்த சாகுபடி செலவில் அதிக மகசூல் எடுக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சேலம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கழிவு மண்ணில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதுபோன்ற பல்வேறு அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement