Ambedkar Thathuvam in Tamil
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் பாபாசாகேப் என போற்றப்படுகிறார், இவர் ஒரு இந்திய சட்ட நிபுணர், பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவருடைய பிறந்த தினம் ஏப்ரல் 14, 1891. அம்பேத்கர் சுதந்திர இந்தியாவின் முதல் “சட்டம் மற்றும் நீதி அமைச்சர்”, மேலும் இந்திய அரசியலமைப்பின் தலைவராக கருதப்படுகிறார். அம்பேத்கர் ஒரு சிறந்த மாணவராக இருந்தார், கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார், சட்டம், பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் ஆராய்ச்சியாளராக புகழ் பெற்றார்.
இவரது ஆரம்ப வாழ்க்கையில், இவர் ஒரு பொருளாதார நிபுணர், பேராசிரியர் மற்றும் வழக்கறிஞர். அம்பேத்கரது பிற்கால வாழ்க்கை அவரது அரசியல் நடவடிக்கைகளால் குறிக்கப்பட்டது. இவர் இந்தியாவின் சுதந்திரத்திற்கான பிரச்சாரம் மற்றும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார், இதற்காக பத்திரிகைகளை வெளியிட்டார், அரசியல் உரிமைகள் மற்றும் தலித்துகளுக்கான சமூக சுதந்திரத்தை ஆதரித்தார். சரி இந்த பதிவில் டாக்டர் அம்பேத்கர் கூறிய தத்துவங்கள் சிலவற்றை படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றை இப்பொழுது ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க.
அம்பேத்கர் தத்துவம்:

பிறந்த சமூகத்தின் விடுதலைக்காக போராடவில்லை எனில் அந்த சமூகத்தின் முதல் சாபக்கேடு நீ தான்.
Ambedkar Thathuvam in Tamil:

ஒரு அடிமைக்கு முதலில்
அவன் அடிமை என்பதை உணர்த்து
பிறகு அவனாகவே கிளர்ந்து எழுவான்.
Thathuvam Ambedkar Quotes Tamil
1.ஓரு மனிதனின் சிறந்த அடையாளம் சுய மரியாதை அதை இழந்து வாழ்வதுதான் பெரிய அவமானம் .
2. உலகில் யாரும் தெய்வீக குணங்களுடன் பிறப்பது இல்லை.ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொறுத்துத்தான் முன்னேற்றமோ வீழச்சியோ ஏற்படுகிறது.
3.மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் நிவர்த்தி செய்தால்தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்தப் பெயர் ஒருபோதும் தேவையில்லை.
4.எப்போதோ சொன்ன ஒரே கருத்தை சிந்தனையுள்ள எந்த மனிதனும் பிடித்துக் கொண்டிருக்க மாட்டான் .
5.சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தற்போதைய இன்பங்களை தியாகம் செய்து பாடுபடுங்கள் . குறிக்கோளை எட்டும் வரை தீ போல சுடும் கடும் துன்பங்களை ஏற்று தியாகம் செய்யுங்கள் .
அம்பேத்கர் கல்வி தத்துவம்:
கல்வி என்பது முன்னேற்றம் மற்றும் எழுச்சிக்கான கல்.
ஒருவர் கற்ற கல்வி அவருக்கு மட்டும் மல்ல, அவரது சந்ததியை எழுச்சிக்கும், அக்குடும்பத்தின் வளர்ச்சிக்கும் அந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்.
சமூக விடுதலை, சமூக சமத்துவம், சமூகப் பாகுபாடு, சாதிவெறி, தீண்டாமை ஆகியவற்றை ஒழிக்க கல்வி உதவும்.
கல்வி எல்லோருக்கும் சாத்தியமாவதற்காக அம்பேத்கர் பெரும் பணியாற்றினார்
சமூக மற்றும் பொருளாதார ஒழுங்கின் மறுசீரமைப்பை அவர் வலியுறுத்தினார்.
Ambedkar Thathuvam Tamil:
வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கவலை வேண்டாம். யார் பாராட்டினாலும்,பாராட்டா விட்டாலும் கடமையை செய்வோம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது எதிரியும் நம்மை மதிக்கத் துவங்குவான்.
எவனோருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ அவனே சுதந்திர மனிதன்.
அம்பேத்கர் தத்துவம்:

கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கையை விட ஏழைகளுக்கு கொடுக்கும் கல்வி மேலானது.
Ambedkar Thathuvam in Tamil:

ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுயமரியாதை. இதை இழந்து வாழ்வது தான் பெரிய அவமானம்.
அம்பேத்கர் தத்துவம்:

எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதனை நான் புரிந்து கொள்ளவில்லை என்றால் நான் மனிதனே இல்லை.
| மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Quotes in Tamil |













