வேலுநாச்சியார் கவிதை – Velu Nachiyar Quotes in Tamil
இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார். இந்த வீர தமிழச்சியை குறித்து சில கவிதைகளை இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.
வேலுநாச்சியார் கவிதைகள்:
விதையாக பிறப்பின்
முளையிட்டு எழுவேன்..
பகையாக இருப்பின்
போர்க் கொண்டு வெல்வேன்..
என் தசையோடு கண்படின்
உன் உயிரதனை கொய்வேன்..
எட்டு திசையெங்கும்
மார்தட்டிச் சொல்வேன்..
நான் வீர தமிழச்சி டா!
சிதைவேனோ! வீழ்வேனோ!
எமன் வசைப் பாட,
எலும்புகள் எருவாக,
எழுந்தருள்வேன் தீ் பிழம்பாக
திரியிட்டு காத்திடுவாய்!
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
சுயமரியாதை கவிதை
வேலுநாச்சியார் கவிதைகள்:
வேலு நாச்சி அவ
வீர சாட்சி!
மறவர் பிறப்பு-அவள்
மறவாத இருப்பு!
வெள்ளையேன் கண்ணீல்-
விரல் விட்டு
ஆட்டியவர்களில்
அவ விரலும் ஒன்று!
Velu Nachiyar Quotes in Tamil:
வடக்கே ஜான்சி
ராணிக்கு முன்னே
தெற்கே பேன்சி(பேமஸ்)
ராணியாய் ஆனவள்!
வீர தமிழச்சி
விவேகம் அவகட்சி!
நயவஞ்சகன் நவாப்மூலம்
வேலுநாச்சியார் கவிதை
நிர்கதியாய் ஆனவள்
நடுத்தெருவிற்கு வந்தவள் – பின்
அவன் குல நடுங்கச்
செய்தவள்…
நெற்குதிராய் நிமிர்தவள்!
Velu Nachiyar Quotes in Tamil:
சிவகங்கை சீமைக்கு
சீராய் புகுந்த மகிமை
கணவர் இறந்ததும்
போராய் எழுந்த பெருமை!
உடன்கட்டை ஏறாது
உடல் சுட்டே குறைக்காது
நெஞ்சுக்குழி ஈரம்
மறையாது
அவ ராணி ஆன வீரம்
மறக்காது!
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
கார்ல் மார்க்ஸ் தத்துவங்கள்
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |