Crab Pepper Masala Recipe in Tamil
வணக்கம் நண்பர்களே.. அசைவ உணவுகளால் மீன், மட்டன், சிக்கனுக்கு அடுத்தபடியாக அனைவரும் விரும்பி சாப்பிடுவது நண்டு. நாட்டில் புரோட்டின், ஒமேகா 3 பேட்டி ஆசிட், செலினீயம், விட்டமின் பி2, காப்பர் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் உள்ளது. நண்டு ரெசிபி பல இருந்தாலும் நண்டினை பெரும்பாலும் கிரேவி செய்து சாப்பிடுவார்கள். ஆகவே, இப்பதிவில் நண்டு மிளகு மசாலா செய்வது எப்படி.? என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Make Crab Masala in Tamil:
தேவையான பொருட்கள்:
- நண்டு – 500 கிராம்
- நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 4
- பச்சை மிளகாய் – 2
- உப்பு – தேவைக்கேற்ப
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
- தனியா தூள் – 2 ஸ்பூன்
- தக்காளி – 1
- கருவேப்பிலை – 2 கொத்து
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்:
- மிளகு – 2 ஸ்பூன்
- சீரகம் – 1/2 ஸ்பூன்
- சோம்பு – 1/2 ஸ்பூன்
- பூண்டு – 10 பற்கள்
- இஞ்சி – 1 துண்டு
செய்முறை:
ஸ்டேப் -1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மசாலா அரைக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
அடுத்து வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை கழுவி பொடியாக நறுக்கி தனித்தனியாக வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில், நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4
அதன் பின், இதனுடன் பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -5
வெங்காயம் வதங்கியதும், அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து கிளறி விடுங்கள். அடுத்து, இதனுடன் 1 ஸ்பூன் உப்பு, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 2 ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் 2 ஸ்பூன் தனியா தூள் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.
ஸ்டேப் -6
பின், நறுக்கிய தக்காளி சேர்த்து 5 நிமிடம் வரை வதக்கி கொள்ளுங்கள். இந்நிலையில் சுத்தம் செய்து வைத்துள்ள நண்டினை சேர்த்து 1/2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் வரை வேகவிடுங்கள்.
அவ்வளவு தாங்க.. சுவையான நண்டு மிளகு வறுவல் தயார்..
மட்டன் ரோஸ்ட் செய்முறையை தெரிந்துகொள்ள படத்தை கிளிக் செய்யவும்👇
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |