How to Make Kerala Fish Curry in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் சமையல் குறிப்பில் சுவையான உணவு வகைகளை பதிவிட்டு வருகிறோம். அதேபோல், இன்றைய பதிவில் கேரளா ஸ்டைலில் சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி என்பதை தான் பார்க்கப்போகிறோம். பொதுவாக மீன் குழம்பு என்றாலே அனைவருக்கும் நாக்கில் எச்சில் ஊரும். அதிலும் கேரளா ஸ்டைலில் மீன் குழம்பு செய்தால் சொல்லவே வேண்டாம். அவ்வளவு சுவையாக இருக்கும். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ருசி இருக்கும். எனவே கேரளா மீன் குழம்பு சுவையாக வைப்பது எப்படி என்பதை இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How to Make Kerala Style Fish Curry Recipe in Tamil:
மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
- மீன்- 1 கிலோ
- தேங்காய் எண்ணெய்- தேவையான அளவு
- வெந்தயம்- 1 டீஸ்பூன்
- கடுகு- 1 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 8
- தக்காளி- 2
- பச்சை மிளகாய்- 3
- இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 டீஸ்பூன்
- புளி- நெல்லிக்காய் அளவு
- உப்பு- தேவையான அளவு
- கறிவேப்பிலை- 2 கொத்து
- மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
- தனியா தூள்- 1 1/2 ஸ்பூன்
- சீரகத்தூள்- 1/4 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
மீன் குழம்பு வைத்து சாப்பிட்டுருப்பீர்கள்..ஆனால் மீன் குருமா சாப்பிட்ருக்கீர்களா..
கேரளா மீன் குழம்பு செய்வது எப்படி..?
ஸ்டேப் -1
முதலில் அடுப்பில் மண் சட்டியை வைத்து அதில் 2 ஸ்பூன் தேங்காய் அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடானதும் அதில் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
ஸ்டேப் -2
வெங்காயம் நன்றாக வதங்கியதும், அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும். பிறகு, வதக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிது நேரம் ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
ஸ்டேப் -3
இப்போது, மீண்டும் அடுப்பில் மண் சட்டியை வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிய விடுங்கள்.
ஸ்டேப் -4
பிறகு, அதில் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். இந்நிலையில் அடுப்பை குறைவான தீயில் வைத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் சீரக தூள் சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
கேரளா ஸ்டைல் சிக்கன் குழம்பு செய்யலாம் வாங்க
ஸ்டேப் -5
இப்போது இதனுடன், அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி பேஸ்டினை சேர்த்து கொள்ளுங்கள். பிறகு, நெல்லிக்காய் அளவில் புளியை ஊறவைத்த புளி கரைசலை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து அடுப்பில் உள்ள குழம்புடன் சேர்த்து மீண்டும் ஒரு முறை கலந்து விடுங்கள்.
ஸ்டேப் -6
இந்நிலையில் குழம்பிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடுங்கள். குழம்பு நன்றாக கொதித்து பச்சை வாசனை நீங்கிய பிறகு அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மீன்களை சேர்த்து வேக வைக்க வேண்டும்.
ஸ்டேப் -7
மீன் நன்றாக வெந்ததும் அதில் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான கேரளா மீன் குழம்பு தயார்..!
ஆந்திரா ஸ்டைல் கிரீன் சில்லி சிக்கன்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |