Keerai Vadai Recipe in Tamil
நண்பர்களே வணக்கம்..! பொதுவாக மாலை நேரத்தில் ஏதாவது சாப்பிட தோன்றும். அப்போது வீட்டில் ஏதாவது செய்ய தோன்றும். ஆனால் வீட்டில் வடையை அவ்வளவு சீக்கிரத்தில் செய்ய முடியாது. கடையில் தான் வாங்க முடியும். ஆனால் அந்த கடையில் இருக்கும் கீரை வடை மட்டும் தான் சூப்பராக இருக்கும். ஆனால் வீட்டில் எப்படி செய்தாலும் அது அவ்வளவு சுவையாக இருக்காது. சுவையாக இருக்க என்ன செய்யவேண்டும் என்பதை பற்றியும் கீரை வடையை மொறு மொறுவென்று எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Keerai Vadai Recipe in Tamil:
ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பு – 1/2 கப், உளுந்தம் பருப்பு – 1/2 கப், இரண்டையும் சம அளவில் எடுத்து போட்டு நன்றாக கழுவி நல்ல தண்ணீரை ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
அடுத்து பருப்பு ஊற்றியதும் அதில் இருக்கும் தண்ணீரை மட்டும் வடிகட்டி பருப்பை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அந்த பருப்பில் எந்த தண்ணீரும் இருக்க கூடாது. அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு கொரகொரப்பாக ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.
டேஸ்டான கீரை வடை செய்வது எப்படி
அதன் பின்பு வர மிளகாய் – 3, பச்சை மிளகாய் 1, சோம்பு – 1 ஸ்பூன், இஞ்சி தோல் சீவியது – 1 இன்ச், போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் இதை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு வெங்காயத்தை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். கருவேப்பிலை கொத்தமல்லி தழை, தேவையான அளவு உப்பு, இறுதியாக பொடியாக நறுக்கிய கீரை, சேர்க்க வேண்டும். அவ்வளவு தான் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வடை மாவு போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் ஒவ்வொன்றாக வடையை போட்டு எடுக்கவும். அவ்வளவு தான் வடை மொறு மொறுப்பாக வரும்.
குறிப்பு:
கீரை வடை என்றால் எந்த கீரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு சில கீரைகள் பிடிக்காது. அதனால் உங்களுக்கு பிடித்த கீரையை சேர்த்து செய்து சாப்பிடுங்கள் அவ்வளவு தான் வடை ரெடி.
மீன் குழம்பு வைத்து சாப்பிட்டுருப்பீர்கள்..ஆனால் மீன் குருமா சாப்பிட்ருக்கீர்களா
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |