ராகி தோசை செய்வது எப்படி? – Ragi Dosa Recipe in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. உடலுக்கு அதிக நன்மை அளிக்க கூடிய தானியம் வகைகளில் ஓன்று தான் இந்த ராகி. ராகியை ஏராளமான சத்துக்கள் உள்ளது, இதனை உட்கொள்வதினால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். ராகியை தினமும் நமது உணவில் எடுத்துக்கொள்வது ஏராளமான நன்மைகளை அளிக்கும்.
ராகியை பெரும்பாலும் களி மட்டுமே கிண்டுவார்கள் அல்லது கஞ்சி செய்வார்கள். இன்றிய பதிவில் நாம் ராகியை மொறு மொறு தோசை செய்வது எப்படி என்று தான் தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க பதிவை தொடர்ந்து படித்து கேழ்வரகு தோசை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆவிபறக்கும் ஆரோக்கியமான இட்லி இப்படிக்கூட செய்ய முடியுமா…
தேவையான பொருட்கள்:
- கேழ்வரகு – ஒரு கப்
- வெள்ளை முழு உளுந்தைப்பருப்பு – 1/4 கப்
- வெந்தயம் – ஒரு ஸ்பூன்
- அவல் – 1/4 கப்
- உப்பு – தேவையான அளவு
ராகி தோசை செய்முறை:
ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு கப் கேழ்வரகு, 1/4 கப் உளுந்து, ஒரு ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து ஒரு மூன்று முறை சுத்தமாக கழுவி எடுத்துக்கொள்ளுங்கள்.
பின்பு அதில் 1/4 கப் அவல் சேர்த்து கேழ்வரகு நன்கு முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊறி 5 மணி நேரம் நன்கு ஊறவைக்க வேண்டும்.
ஐந்து மணி நேரம் கழித்து அவற்றில் இருக்கும் தண்ணீரை முழுமையாக வடிகட்டி மிக்சி அல்லது கிரைண்டர் ஏதாவது ஓன்று பயன்படுத்தி நன்கு நைசாக தோசை மாவு பக்குவத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து கைகளை பயன்படுத்தி நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளுங்கள்.
பிறகு 8 மணி நேரம் வரை அரைத்த மாவை புளிக்கவிட வேண்டும். 8 மணி நேரம் கழித்து அரைத்த மாவை தோசை ஊற்ற பயன்படுத்தலாம்.
அவ்வளவு தான் ராகி தோசை மாவு தயார் செய்யும் முறை. இவ்வாறு மாவு அரைத்து ராகி தோசை சுட்டு கொடுத்தீர்கள் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். கண்டிப்பாக ஒரு முறை உங்கள் வீட்டில் இவ்வாறு ராகி தோசை செய்து கொடுங்கள் அனைவருமே வேண்டாம் என்று சொல்லலாம் திரும்ப திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
குறிப்பு:
அவலுக்கு பதில் நீங்கள் வடித்த சாதத்தை 1/4 கப் சேர்த்துக்கொள்ளலாம். அதுவும் நன்றாக தான் இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இட்லி, சப்பாத்தி, தோசை ஆகியவற்று ஏற்ற கடாய் காளான் இப்படி ஒருமுறை செய்து சுவைத்து பாருங்க..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |