ஆவிபறக்கும் ஆரோக்கியமான இட்லி இப்படிக்கூட செய்ய முடியுமா…

Advertisement

ராகி இட்லி செய்வது எப்படி ?

வீட்டில் காலை உணவாக எப்போதும் வழக்கம் போல இட்லி, தோசை இதையே சாப்பிடுவதால் நமக்கு காலை உணவே பிடிக்காமல் போய்விடும். இட்லி உடலுக்கு ஆரோக்கியமான காலை உணவாகும் ஆனால் குழந்தைகளுக்கு தினம் இட்லி கொடுத்தால் கண்டிப்பாக சாப்பிட மாட்டார்கள். அதுவே தோசையை வெங்காய தோசை, மசாலா தோசை என்று வித விதமாக செய்துகொடுத்தால் கண்டிப்பாக சாப்பிடுவார்கள். அதே மாதரி இட்லியையும் வித விதமா செய்யலாம். மாசால் இட்லி, ரவா இட்லி, சேமியா இட்லி, ராகி இட்லி என்று பல விதமாக செய்யலாம். அந்த வகையில் இன்று இந்த பதிவில் ராகி இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரவா இட்லியை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள் குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்களுக்கும் பிடித்த ஒரு உணவாக இருக்கும். வாருங்கள் பதிவிற்கு செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ராகி இட்லி செய்வது எப்படி ?

ragi idli recipe

ராகி இட்லி தேவையான பொருள்:

  • எண்ணெய் -2 டீஸ்பூன்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • முந்திரி – 2  (நறுக்கியது)
  • கேரட் – 2 டீஸ்பூன்
  • மிளகாய் – 2
  • இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – 1
  • ரவா – 1 கப்
  • ராகி மாவு – 1 கப்
  • உப்பு – 1 டீஸ்பூன்
  • தயிர் – 1 கப்
  • கொத்தமல்லி , நறுக்கியது
  • தண்ணீர் – 1 கப்

ராகி இட்லி செய்முறை:

கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, 1 டீஸ்பூன் சீரகம்,பெருங்காய தூள் மற்றும் முந்திரி சேர்த்து வதக்கவும்.

முந்திரி பொன்னிறமாக மாறியவுடன் துருவிய கேரட், மிளகாய், டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கேரட் பச்சை தன்மை போகும் வரை  வதக்கவும்.

பின்னர் ரவையை சேர்த்து ரவை பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

பின்னர் அதனுடன் ராகி மாவு சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.

பின்னர் அதனை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும். அதில் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கப் தயிர் மற்றும் கொத்தமல்லி சேர்த்து கொள்ளவும் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி செய்தால் மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement