Special Chutney For Idli Dosa in Tamil
வாசகர்களே வணக்கம்..! என்ன நண்பர்களே தினமும் இட்லி தோசைக்கு ஓரே மாதிரியான சட்னி செய்து சாப்பிட்டு அலுத்து போய்விட்டதா..? பொதுவாக நம் அனைவரின் வீட்டிலும் இட்லி, தோசைக்கு ஒரே சட்னி தான் செய்வார்கள். இது பலருடைய புலம்பலாக இருக்கிறது. அதனால் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் தினமும் இந்த பதிவின் வாயிலாக புதிய புதிய சட்னி ரெசிபிகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று இட்லி தோசைக்கு ஏற்ற அருமையான சட்னி செய்வது எப்படி என்பதை பற்றி தான் காணப்போகின்றோம். அதுவும் இந்த சட்னிக்கு தக்காளி, வெங்காயம் தேவையில்லை. ஆனால் இந்த சட்னி மட்டும் செய்து பாருங்கள். கூட 4 இட்லி சேர்த்து சாப்பிடுவார்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
தக்காளி, வெங்காயம் சேர்க்காத சட்னி செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:
- பூண்டு – 4 பற்கள்
- கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
- வெள்ளை உளுந்து – 1 டேபிள் ஸ்பூன்
- நிலக்கடலை – 4 டேபிள் ஸ்பூன்
- பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
- வர மிளகாய் – காரத்திற்கு ஏற்றது போல்
- புளி – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
எப்போதும் போல் சட்னி செய்யாமல் கர்நாடகா ஸ்டைல் சட்னி செய்து கொடுங்கள் |
தக்காளி, வெங்காயம் சேர்க்காத சட்னி செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளவும். பின் அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடானதும் அதில் நாம் எடுத்து வைத்துள்ள பூண்டு பற்களை போட்டு நன்றாக வதக்கி தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.
அடுத்து அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு மற்றும் வெள்ளை உளுந்து சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். பின் அதில் நிலக்கடலை 4 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். நிலக்கடலை வதங்கிய பின் அதில் பொட்டுக்கடலையை போட்டு வதக்க வேண்டும்.
பிறகு அதில் உங்கள் காரத்திற்கு தகுந்தது போல காய்ந்த மிளகாய் போட்டு அதையும் சேர்த்து வதக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
ஐயர் வீட்டில் செய்யும் அருமையான பூண்டு சட்னி இரண்டு இட்லி அதிகமாக உள்ள போகும்
மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்:
அடுத்து ஒரு மிக்சி ஜார் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் நாம் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து, அதனுடன் சிறிதளவு புளி மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
இறுதியாக கடுகு மற்றும் கருவேப்பிலை போட்டு தாளித்து நாம் அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்ற வேண்டும். அவ்வளவு தான் தக்காளி வெங்காயம் சேர்க்காத ஸ்பெஷல் சட்னி ரெடி..!
ஐயர் வீட்டில் செய்யும் அருமையான பூண்டு சட்னி இரண்டு இட்லி அதிகமாக உள்ள போகும்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |