Non Veg-யே மிஞ்சிடும் சுவையில் சைவ கீமா கிரேவி செய்வது எப்படி..?

Veg Keema Masala Recipe in Tamil

Veg Keema Masala Recipe in Tamil

பொதுவாக அனைவருக்குமே ஏதாவது ஒரு புது வகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதிலும் குறிப்பாக சைவ பிரியர்களுக்கு இந்த ஆசை அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் சுவையான உணவுகளை தேடி தேடி சென்று சாப்பிடுவார்கள். அப்படி சைவ பிரியர்கள் அனைவராலும் தேடி தேடி சென்று விரும்பி சாப்பிடப்படும் பல வகையான சைவ உணவுகளில் இந்த சைவ கீமா அல்லது சோயா கீமாவும் ஒன்று.

அப்படி அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் சைவ கீமா அல்லது சோயா கீமாவை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் எவ்வாறு செய்வது என்பதை பற்றி இன்றைய பதிவில் பார்க்க போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள முறையில் நீங்களும் உங்கள் வீட்டில் இந்த சைவ கீமாவை செய்து சுவைத்து பாருங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Soya Veg Keema Masala Recipe in Tamil:

Soya Veg Keema Masala Recipe in Tamil

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. சோயா – 100 கிராம் 
  2. பச்சை பட்டாணி – 1 கப் 
  3. பட்டை – 2
  4. கிராம்பு – 2
  5. ஏலக்காய் – 1
  6. பிரிஞ்சு இலை – 1 
  7. சீரகம் – 1/2 டீஸ்பூன் 
  8. பெரிய வெங்காயம் – 2
  9. தக்காளி – 2
  10. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  11. மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  12. மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  13. மல்லி தூள் – 1 டீஸ்பூன்
  14. கரம் மசாலா – 1 டீஸ்பூன்
  15. சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
  16. கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி அளவு (பொடியாக நறுக்கியது) 
  17. வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் 
  18. உப்பு – 1 டீஸ்பூன்
  19. தண்ணீர் – தேவையான அளவு 

சுவையான மொறு மொறு சோயா கட்லெட் செய்ய தெரியுமா

ஸ்டேப் – 1

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 100 கிராம் சோயாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதில் இருக்கும் தண்ணீரை நன்கு பிழிந்து எடுத்து விட்டு ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் பச்சை பட்டாணியை சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள். பிறகு நாம் எடுத்து வைத்துள்ள 2 பெரிய வெங்காயம் மற்றும் 2 தக்காளி  ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

கத்திரிக்காய் கிரேவி இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்

ஸ்டேப் – 3

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 பட்டை, 2 கிராம்பு, 1 ஏலக்காய், 1 பிரிஞ்சு இலை மற்றும் 1/2 டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 4

பிறகு அதனுடனே நாம் பொடியாக நறுக்கி வைத்துள்ள 2 பெரிய வெங்காயம் மற்றும் 2 தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 5

பின்னர் அதனுடன் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் மல்லி தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலா, 1 டீஸ்பூன் சீரகத்தூள் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

சப்பாத்திக்கு இப்படி ஒருமுறை Mushroom Gravy செய்து சுவைத்து பாருங்கள்

ஸ்டேப் – 6

அவை அனைத்து நன்கு ஒன்றுடன் ஒன்று கலந்த பிறகு அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள சோயா மற்றும் வேக வைத்து எடுத்து வைத்திருந்த பச்சை பட்டாணியை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். இவை நன்கு கொதித்தவுடன் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் மற்றும் பொடியாக நறுக்கிய 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கி கொள்ளுங்கள்.

இப்பொழுது நமது சைவ கீமா தயராகி விட்டது வாங்க சுவைக்கலாம்..! நீங்களும் இந்த சைவ கீமா ரெசிபியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil