தண்ணீர் தொட்டி கட்ட தமிழ்நாடு அரசின் விவசாய மானியம்..! Agriculture Scheme in Tamil..!
விவசாய நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். இன்றைய பதிவில் தண்ணீர் தேக்க தொட்டி கட்ட மத்திய அரசு விவசாயிகளுக்கு 40 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகிறது. அதாவது தமிழக அளவில் அனைத்து வட்டாரங்களும் பயன்பெறும் வகையில், பிரதமரின் விவசாய நீர் பாசன திட்டம் மற்றும் நுண்ணீர் பாசனம் திட்டம் மற்றும் பாசன கட்டமைப்பு உருவாக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயனடையலாம், இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
விவசாயிகளுக்கு பயனுள்ள 6 திட்டங்கள் |
Agriculture Scheme in Tamil..!
தேவைப்படும் ஆவணங்கள்:-
இந்த தண்ணீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான மானியம் பெற சிறு குறு விவசாயி சான்றிதழ் தேவை. எனவே இந்த சிறு குறு விவசாயி சான்றிதழ் வைத்துள்ள விவசாயிகள் உங்கள் அருகில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளாலாம்.
எவ்வளவு மானியம் வழங்கப்படும்:-
பாசனத்துக்கு தண்ணீரை குழாய் மூலம் கொண்டு செல்ல, 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. நீர் சேமிப்பு தொட்டி அமைக்க, 40 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல் புதிதாக சொட்டுநீர் பாசன கட்டமைப்பை நிறுவும் விவசாயிகள் இத்திட்டத்தில் மானியம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னுரிமை வழங்கப்படும்:-
வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில் பதிவு செய்துள்ள விவசாயிகள் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
அரசின் இலவச ஆடு, மாடு, கோழி கொட்டகைக்கு விண்ணப்பிப்பது எப்படி? |
குறிப்பு:-
ஏற்கெனவே தாங்கள் தண்ணீர் தேக்க தொட்டி கட்டியிருந்தாலும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து மானிய தொகையை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்து அறிந்து கொள்ள தங்கள் வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | pasumai vivasayam in tamil |