LIC Dhan Varsha Plan Details in Tamil
அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்… LIC – Life Insurance Corporation of India என்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது ஒரு LIC தன் வர்ஷா என்ற புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த LIC யின் தன் வர்ஷா திட்டம் என்பது இணைக்கப்படாத தனிநபர் ஆயுள் காப்பீட்டு திட்டம் என்று கூறலாம். இந்த தன் வர்ஷா திட்டமானது பாதுகாப்பான சேமிப்பை வழங்குகிறது. இந்த தன் வர்ஷா திட்டத்தை பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க…
செல்வமகள் சேமிப்பு திட்டம் விதிமுறை..! |
LIC தன் வர்ஷா திட்டம் – LIC Dhan Varsha Scheme in Tamil:
இந்த தன் வர்ஷா திட்டத்தை பங்கு சந்தை அபாயம் இல்லாத முதலீட்டு திட்டமாகும். இந்த திட்டத்தை Close Ended திட்டம் என்று கூறலாம். LIC நிறுவனம் ஒற்றை பிரீமியம் உள்ள ஒரு Life Insurance திட்டமாக இந்த தன் வர்ஷா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த தன் வர்ஷா திட்டம் எண் 866 என்பது பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என்ற 2 சிறப்பு அம்சங்களை மக்களுக்கு வழங்குகின்றது.
எல்ஐசி தன் வர்ஷா 866 திட்டத்தின் நன்மைகள்:
- இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் பாலிசி காலம் முழுவதும் சேரும் சேமிப்பு தொகையானது பாலிசி காலத்தை பொறுத்து உங்களுக்கு கிடைக்கும்.
- இந்த தன் வர்ஷா 866 திட்டத்தின் மூலம் வயதான காலத்திலும் மனநிறைவான அதிகமான தொகை உங்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் சேருபவர்களுக்கு பாதுகாப்பான முதலீட்டை கொடுக்கிறது.
- அதேபோல வயதான காலத்தில் இந்த தொகை சேமிப்பு தொகையாக உங்களுக்கு கிடைக்கிறது.
- இந்த எல்ஐசி தன் வர்ஷா திட்டத்தினை மார்ச் 31, 2023 வரை மட்டுமே எடுத்து கொள்ள முடியும்.
- இந்த திட்ட காலமானது 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருக்கும்.
- இந்த தன் வர்ஷா திட்டத்தில் சேர்வதற்கு வயது வரம்பு தேவையில்லை.
- இந்த தன் வர்ஷா திட்டத்தில் பாலிசிக்கு எதிராக கடன் வசதியும் உண்டு. அதாவது, பாலிசி காலத்தின் போது எந்த நேரத்திலும் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் தொகையை பெற்று கொள்ளலாம்.
- இந்த திட்டமானது வயது வரம்பு இல்லாத, தேர்தெடுக்கப்பட்ட இன்சூரன்ஸ் தொகையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
இறப்பு கால பலன்:
இந்த தன் வர்ஷா திட்டத்தில் பாலிசி காலத்தின் போது ஆயுள் காப்பீடு செய்திருந்தால் பாலிசி எடுத்தவர் இறந்து விட்டால் இந்த திட்டத்தின் மூலம் நிதி உதவித்தொகை கிடைக்கும்.
இந்த தொகையானது நீங்கள் இல்லாவிட்டாலும் உங்களின் குடும்பத்தில் இருப்பவருக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் நிதி தொகை வழங்கப்படும்.
இறப்பு காலத்திற்கு பின் இறந்த ஆண்டிற்கான உத்தரவாதத்துடன் நிதி உதவி தொகை வழங்கப்படும்.
மேலும் இது போன்ற சேமிப்பு திட்டங்கள் மற்றும் காப்பீட்டு திட்டங்கள் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள் 👉👉👉 | Schemes |