வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்கள் எதிர்காலத்திற்கான சிறந்த எல்ஐசி பாலிசி திட்டங்கள்..!

Updated On: November 11, 2021 3:16 PM
Follow Us:
LIC Policy Details in Tamil
---Advertisement---
Advertisement

எல்.ஐ.சி. யின் திட்டங்கள் – LIC Policy Details in Tamil

சேமிப்பு என்பது நமது வாழ்க்கையில் கஷ்டமான காலங்களில் மிகவும் உதவியாக இருக்கும். அந்த வகையில் வழக்கமாக, சேமிப்பு என்று வரும்போது, ​​பெரும்பாலானோர் அரசாங்க திட்டங்கள் மற்றும் வங்கி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் நிதி வலிமைக்காக இப்பொழுது பல வகையான முதலீட்டு திட்டங்கள் உள்ளன. இருப்பினும், LIC-யின் திட்டங்கள் (LIC Policy) பாதுகாப்பானதாகவும் சிறந்ததாகவும் கருதப்படுகின்றன. சரி இந்த பதிவில் சிறந்த வகையான எல்ஐசி பாலிசி திட்டங்கள் பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

LIC பாலிசி வகைகள் – எல்ஐசி பாலிசி திட்டங்கள்

ஜீவன் அமர் திட்டம் | LIC Jeevan Amar Plan in Tamil:

  1. LIC-யின் ஜீவன் அமர் திட்டம் 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கானது.
  2. பாலிசியின் மெச்சூரிட்டி வயது அதிகபட்சம் 80 ஆண்டுகள் ஆகும்.
  3. இந்த பாலிசி வாடிக்கையாளருக்கு மரணம் வரை ஆயுள் பாதுகாப்பு அளிக்கிறது.
  4. பாலிசி காலம் 10 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் ஆகும்.
  5. புகைபிடிப்பவர்களும் இந்த பாலிசியில் கவர் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், புகைப்பிடிப்பவர்களின் பிரீமியம் அளவு அதிகமாகும்.
  6. பிரீமியம் ஆண்களை விட பெண்களுக்கு சற்று குறைவாக உள்ளது.
  7. இதில் அதிக தொகையை காப்பீடு செய்ய விரும்பும் நபர்களுக்கும் அதில் பெரிய தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன.
  8. வாடிக்கையாளருக்கு 1 கோடி ரூபாய் தொகையில் 20% வரை தள்ளுபடி கிடைக்கும்.

எல்ஐசி-யின் ஜீவன் லாப் திட்டம் – Jeevan Labh Plan in Tamil: 

  1. இந்த ஜீவன் லாப் திட்டத்தின் முதிர்ச்சியில் பெரும் தொகை கிடைக்கும்.
  2. பாலிசி முடிவதற்குள் வாடிக்கையாளர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு நிதி உதவி கிடைக்கும்.
  3. பாலிசிதாரர் LIC–ன் லாபத்திலும் பங்கேற்கிறார்.
  4. பாலிசியில் பரிந்துரைக்கப்பட்டவர் இறுதி கூடுதல் போனஸைப் பெறுவார்.
  5. பிரீமியம் செலுத்தும் முறையின் அடிப்படையில் வாடிக்கையாளருக்கு 2% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  6. இருப்பினும், இந்த பிரீமியங்கள் வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் வராது.

ஜீவன் உமங் திட்டம் – Jeevan Umang Policy Details in Tamil:

  1. இந்த ஜீவன் உமங்  திட்டம் LIC–ன் மிக சக்திவாய்ந்த பாலிசியாகும்.
  2. இந்த பாலிசி 100 வயது வரை பாதுகாப்பு அளிக்கிறது.
  3. பாலிசியின் காலம் முடிந்தாலோ, அல்லது காப்பீட்டாளரின் மரணம் ஏற்பட்டாலோ, குடும்பத்திற்கு பாலிசியின் மொத்த தொகை கிடைக்கும்.
  4. இந்த பாலிசியில் 8% அளவிலான மணி பேக் திட்டமும் உள்ளது.
  5. பணி ஓய்வுக்குப் பிறகு, இந்த திட்டம் ஒரு ஓய்வூதிய திட்டம் என்ற விதத்தில் மிகவும் சிறப்பம்சம் வாய்ந்த திட்டமாக இருக்கும்.
newபோஸ்ட் ஆபீஸில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம்

நியூ ஜீவன் ஆனந்த் திட்டம் – New Jeevan Anand Policy Details in Tamil:

  1. இந்த பாலிசியில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் முதலீடு செய்யலாம்.
  2. பாலிசி எடுப்பதற்கான அதிகபட்ச வயது 50 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  3. குறைந்தபட்சம் ரூ.1லட்சம் உறுதி செய்ய (Sum Assured) வேண்டியது அவசியம்.
  4. நியூ ஜீவன் ஆனந்த் பாலிசிதாரர் இறந்து விட்டால், நாமினிக்கும் உத்தரவாதம் மிக்க மற்றும் ஒருங்கிணைந்த போனஸ் கிடைக்கும்.
  5. பாலிசிதாரர் பாலிசியின் முழு காலத்திற்கும் உயிரோடிருந்தால், அவருக்கு டெபாசிட் போனஸுடன் உத்தரவாதமான அசல் தொகையும் வழங்கப்படும்.

டெக் டேர்ம் பிளான் திட்டம் – LIC Tech Term Plan Details in Tamil:-

  1. டெக் டர்ம் பிளான் ஒரு pure risk premium plan ஆகும்.
  2. LIC-யின் இந்த ஆன்லைன் டர்ம் பாலிசி, ஆஃப்லைன் பாலிசிகளை விட மலிவானது.
  3. பாலிசி முதிர்வு காலம் முடிவடைவதற்கு முன்னர் பாலிசிதாரரின் மரணம் ஏற்பட்டால், பாலிசியின் தொகை குடும்பத்திற்குக் கிடைக்கிறது.
  4. பாலிசியின் கொள்கை காலம் 10 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரையாகும்.
  5. 18 வயது முதல் 65 வயது வரையிலான நபர்கள் இந்த திட்டத்தை எடுக்கலாம். LIC-யின் டேர்ம் பிளானில், பாலிசி கவரேஜிற்கான அதிகபட்ச வயது வரம்பு 80 ஆக வைக்கப்பட்டுள்ளது.
  6. நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, அமெக்ஸ் கார்டு, UPI, IMPS மற்றும் இ-வாலட் மூலம் புதுப்பித்தல் (Renewal) மற்றும் பிரீமியம் செலுத்தலாம்.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!