பெண்களுக்காக அஞ்சலகத்தில் புதிய சேமிப்பு திட்டம் அறிமுகம்..!

Advertisement

மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம் திட்டம் 2023 | Mahila Samman Saving Scheme in Post Office in Tamil

அஞ்சலகத்தில் பலவகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அந்த வகையில் தற்பொழுது பெண்களுக்காக அஞ்சலகத்தில் புதிதாக ஒரு சேமிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இந்த திட்டத்தின் பயன்கள் என்ன?, யாரெல்லாம் இந்த திட்டத்தில் பயன்பெறலாம், தகுதி என்ன?, தேவைப்படும் ஆவணங்கள் என்ன, எங்கெல்லாம் இந்த இந்த திட்டம் செயல்படும். போன்ற அனைத்து தகவல்களையும் இங்கு நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம்:

இந்த திட்டத்தின் பெயர் மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம் ஆகும். இந்த திட்டத்தை மத்திய பட்ஜெட் 2023-யில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மத்திய அரசு கொண்டு வந்த ஒரு புதிய சேமிப்பு திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தில் பெண்கள் ஏப்ரல் 1, 2023-யில் இருந்து இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சலகத்தில் பெண்கள் இணையலாம்.

இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
10 ஆயிரம் சேமித்தால் 16 லட்சம் வழங்கும் சேமிப்பு திட்டம்..!

பயன்கள்:Mahila Samman Saving Scheme

மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம் பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட ஒரு ஸ்கீம் ஆகும்.

இது ஒரு Single Investment ஆகும். அதாவது நீங்கள் இந்த Account-ஐ Open செய்யும் போது ஒரு முறை மட்டும் முதலீடு செய்தால் போதும். அதன்பிறகு இந்த திட்டத்தின் கால அளவு முடியும் வரை நீங்கள் எந்த ஒரு முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இந்த திட்டத்தின் கால அளவு முடிந்த பிறகு நீங்கள் எவ்வளவு தொகை முதலீடு செய்தீர்களோ அந்த தொகையும், அதற்கான வட்டியும் சேர்த்து உங்களுக்கு வாங்கப்படும்.

மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம் திட்டத்தின் கால அளவு எவ்வளவு என்றால் இரண்டு வருடம் நிர்ணயித்துள்ளனர்.

Government India இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் இது சிறந்த மற்றும் பாதுகாப்பான சேமிப்பு திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தில் நீங்கள் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

இந்த மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம் சேமிப்பு திட்டத்திற்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்றால் 7.50% வட்டி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் நீங்கள் இணைந்த பிறகு இடைப்பட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் Withdrawal செய்ய வேண்டும் என்றால் அதற்கான ஆப்சனும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் மேலும் என்னென்ன வசதிகளை பெண்களுக்கு வழங்குகிறார்கள் என்பதை நாம் ஏப்ரல் 1, 2023-க்கு பிறகு அறிந்துகொள்வோம். அதாவது இந்த திட்டம் Launch ஆன பிறகு தெரிந்து கொள்வோம் நன்றி வணக்கம்.

இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
1 லட்சம் முதலீட்டிற்கு 2 லட்சம் வருமானம் தரும் அருமையான சேமிப்பு திட்டம்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement