SBI Amrit Kalash Scheme in Tamil
நாம் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதனை கொஞ்சம் கூட தாமதம் செய்ய கூடாது. ஏனென்றால் நீங்கள் இப்போதே சேமிக்க தொடங்கினால் தான் பிற்காலத்தில் அது உங்களுக்கு ஒரு நல்ல பலனை அளிக்கக்கூடிய தொகையாக கிடைக்கும். இதுபோல நீங்கள் சேமிக்க வேண்டும் என்றால் உங்களுக்காக நிறைய திட்டங்கள் உள்ளது. அதில் எந்த திட்டம் உங்களுக்கு ஏற்றவாறு இருக்கிறதோ அதில் சில விதிமுறைகளின் படி நீங்கள் சேர்ந்து கொள்ளலாம். அதற்கு முதலில் அந்த திட்டத்ததை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் SBI-யில் புதிதாக அறிமுகம் ஆகியுள்ள Amrit Kalash திட்டம் பற்றி தெளிவாக தெரிந்துக்கொண்டு நீங்களும் சேமிக்க தொடங்கலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ மாதந்தோறும் 10,000 ரூபாய் வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்..!
Amrit Kalash Deposit Scheme SBI in Tamil:
SBI-யில் புதிதாக அமீர் கலாஷ் என்ற திட்டம் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியர்கள் மட்டும் இல்லாமல் மற்றவர்களும் சேர்ந்து கொள்ளலாம்.
இத்தகைய திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.10% என்பதாகும். ஆனால் மூத்த குடிமக்கள் மற்றும் SBI வங்கியின் வாடிக்கையாளர் ஆகியோருக்கு 7.60% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. மேலும் உங்களுடைய வட்டி தொகையினை வாரம், மாதம் மற்றும் திட்டத்தின் முதிர்வு காலம் எப்போது வேண்டுமானலும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
அமீர் கலாஷ் திட்டத்தில் நீங்கள் அதிகபட்சம் 2 கோடி வரையிலும் முதலீடு செய்து செய்யலாம். மேலும் அமீர் கலாஷ் திட்டமானது 400 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட திட்டம் ஆகும்.
நீங்கள் திடீரென்று இந்த திட்டத்தில் இருந்து பாதியில் கணக்கை முடித்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு என்று தனியாக விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அமீர் கலாஷ் திட்டத்தின் மூலம் நீங்கள் லோன் பெரும் வாய்ப்பும் இருக்கிறது. ஆனால் இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் சேர்ந்து விட வேண்டும். இதுவே இந்த திட்டத்தின் கடைசி நாளாகும்.
உதாரணமாக ஒரு மூத்த குடிமகன் இந்த திட்டத்தில் 1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் 7.60% வட்டி தொகை + முதலீட்டு தொகை இரண்டையும் சேர்த்து 1,08,587 ரூபாய் பெறலாம்.
அதே ஒரு பொதுவான குடிமகன் என்றால் இந்த திட்டத்தில் சொல்லப்பட்டுள்ள 7.10% வட்டி தொகை + முதலீட்டு தொகை இரண்டையும் சேர்த்து 1,08,005 ரூபாய் பெறலாம்.
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |