New Moon vs Full Moon Manifestation Details in Tamil
உங்களில் யாருக்கு தெரியும்..! அமாவாசை, பௌர்ணமி எப்படி விண்வெளியில் நிகழ்கிறது என்று. விண்வெளியில் நிகழும் அனைத்தையும் ஆன்மீக ரீதியாக ஒன்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் விண்வெளியில் ஒரு மாற்றம் நடக்கிறது. அதேபோல் அந்த மாற்றம் எப்படி வருகிறது. நிலவிற்கும், பூமிற்கும், சூரியனுக்கும் இடையில் தான் இதுபோல மாற்றம் ஏற்படுகிறது என்று பார்க்கலாம் வாங்க..!
New Moon vs Full Moon Manifestation Details in Tamil:
முதலில் நிலா அமாவசை பௌர்ணமி என்று காணப்படும். அதேபோல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நிலா காணப்படும். அதை தான் வளர்பிறை தேய்பிறை என்று சொல்கிறோம். அது எப்படி நிகழ்கிறது என்று பார்க்கலாம் வாங்க..!
பூமி ஒரு முறை சூரியனை சுற்றி வருவதற்கு ஒரு வருடம் எடுத்துக்கொள்ளும். அதாவது 365 நாட்கள் எடுத்துக்கொள்ளும். அதேமாதிரி இந்த நிலா பூமியை ஒரு முறை சுற்றி வருவதற்கு 28 நாட்கள் எடுத்துக்கொள்ளும்.
இப்போது பூமி, நிலா, சூரியன் மூன்றும் ஒரு நேர்கோட்டில் நிற்கும். அப்போது சூரியன் வெளிச்சம் நிலவின் மீது படும்போது பூமியிலிருந்து நிலவை பார்க்கும் போது அது சரியாக தெரியாது. அதாவது கருப்பாக தெரியும். அதை தான் நாம் அமாவாசை என்கிறோம். இதை தான் நாம் ஆங்கிலத்தில் New Moon என்கிறோம்.
இதற்கு பின் நிலா பூமியை சுற்றி வருவதற்கு நகரும் நாட்களின் போது கொஞ்சமாக சூரியனை வெளிச்சம் நிலவின் மீது படும். அதனை தான் நாம் வளர்பிறை என்கிறோம்..!
இதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் 👉 இடி இடிக்கும் போது ஏன் “அர்ஜுனா” என்று சொல்கிறோம் காரணம் தெரியுமா
இதனை தொடர்ந்து அதிலிருந்து ஒவ்வொரு நாளும் மாறி வந்துகொண்டே இருக்கும். அதை தான் அரை நிலா, பாதி நிலா என்று சொல்கிறோம்.
அதன் பின் பாதி நகர்ந்து பூமியின் பின்பக்கம் வரும். அப்போது பூமி நடுப்பக்கம் போகும் அதன் பின்பு பூமியிலிருந்து பார்க்கும் போது நமக்கு பௌர்ணமி போல் காணப்படும். அதற்கு பிறகு மீது இருக்கும் பாதியை சுற்றி வருவதை தேய்பிறை என்கிறார்கள்.
பின்பு நகர்ந்து வந்து சூரியனும் பூமிக்கும் நடுவில் வந்துவிடும். இப்படி தான் விண்வெளியில் அமாவாசை, பௌர்ணமி நிகழ்கிறது..!
இதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் 👉 மழைப் பெய்யும் போது மண்வாசம் வர காரணம் என்ன
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |