நூலகம் கட்டுரை | Noolagam Katturai in Tamil

Noolagam Katturai in Tamil

நூலகம் பற்றிய கட்டுரை | Noolagam Katturai

ஒரு ஊருக்கு மிகவும் முக்கியமானது நூலகம். ஏழை மாணவர்கள் மற்றும் நாட்டின் இளைஞர்களுக்கு வெளியில் பணம் கொடுத்து புத்தகங்களை வாங்கி படிக்கும் அளவிற்கு வசதி பெரும்பாலும் இப்போதைய காலத்தில் இல்லை. இந்த நிலையை அறிந்தே அனைத்து ஊர் கிராமப்புறத்திலும் நூலகம் அமைக்கப்பட்டது. நூலகத்தில் நாம் உறுப்பினராக இருந்தால் நமக்கு எந்த நேரத்தில் எது மாதிரியான புத்தகம் வேண்டுமோ அதை நாம் நூலகம் சென்று எடுத்துக்கொள்ளலாம். இலவசமாக நூல்களை எடுத்து படிக்க நூலகம் மிகவும் பயன்படுகிறது. இந்த பதிவில் நூலகத்தின் கட்டுரையை படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

பொருளடக்கம்:

1. முன்னுரை 
2. நூலக தோற்றம் 
3. நூலகத்தின் முக்கியத்துவம் 
4. நூலகத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள் 
5. நூலகங்களில் படிக்கும் விதம் 
6. நூலக பிரிவுகள் 
7. முடிவுரை 

முன்னுரை:

நிலத்தடியில் எந்த அளவிற்கு ஊற்று தோண்டுகிறமோ அந்த அளவிற்கு ஊற்றில் நீர் அதிகமாக காணப்படும். அது போல எந்த அளவிற்கு நாம் கல்வி கற்கின்றமோ நம்முடைய அறிவை அதிகரித்து கொள்ள முடியும். நாம் எந்த அளவிற்கு நூல்களை விரும்பி கற்றுக்கொள்கிறமோ அந்த அளவிற்கு அறிவுத்திறன் பெருகும். நமது அறிவுத்திறனை அளிக்கக்கூடிய நூல்கள் இருக்கும் இடத்தை தான் நூலகம் என்று சிறப்பித்து கூறுகிறோம். 

நூலக தோற்றம்:

முந்தைய காலத்தில் வீட்டில் இருக்கக்கூடிய பெற்றோர்களின் கல்வி திறன் மிகவும் குறைவுத்தான். அரண்மனைகளிலும், கோவில்களிலும் படிக்கும் நோக்கமில்லாமல்  பெருமைக்காக மட்டுமே நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பிற்காலத்தில் அது மாற்றம் அடைந்து நூல்கள் படிப்பதற்கே என்று உருப்பெற்றன.

நூலகத்தின் முக்கியத்துவம்:

ஒரு நாட்டில் ஆலயம், கல்வி நிறுவனம் அமைப்பது எவ்வளவு முக்கியமோ அது போன்று நூலகம் அமைப்பது மிகவும் முக்கியமானதே. நூலகம் இல்லாத ஊரில் வசிப்பதை நாம் தவிர்க்க வேண்டும். இப்போதெல்லாம் சிலர் வீட்டிலையே நூலகம் அமைத்து படித்து வருகின்றனர். இது ஒரு நல்ல விஷயம்தான். இருந்தாலும் நூலகம் போன்று அனைத்து விதமான நூல்களையும் நாம் வாங்கி வைத்து படிக்க முடியாது. நூலகம் போன்ற இடவசதி அனைவருக்கும் கிடைக்காது. 

தன்னம்பிக்கை கட்டுரை

நூலகத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள்:

நூலகத்திற்கு புத்தகச்சாலை, ஏடகம், சுவடியகம், சுவடிச்சாலை, வாசக சாலை, படிப்பகம், நூல் நிலையம், பண்டாரம் என பல்வேறு சிறப்பு பெயர்கள் உள்ளன. 

நூலகங்களில் படிக்கும் விதம்:

நூலகங்களில் எப்போதும் அமைதி நிலையினை கடைப்பிடிக்க வேண்டும். சத்தம் போட்டு நூலகத்தில் நூல்கள் படிக்கக் கூடாது. ஏதேனும் உங்களுக்கு தேவைப்படும் கருத்துக்களைக் குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக் கொள்ளலாம். நூலகத்தில் உள்ள நூல்களில் எந்த குறிப்புகளையும் எழுத கூடாது. நூலகரிடம் அனுமதி பெற்று உங்களுக்கு விருப்பமான நூல்களை தேடியெடுத்து படித்து முடித்த பிறகு பொறுப்பாக ஒப்படைக்க வேண்டும். நூலகத்தின் நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுதல் அவசியம்.

கல்வியின் சிறப்பு கட்டுரை

நூலக பிரிவுகள்:

அரசு பொது நூலகங்கள், சிறுவர்களுக்கான நூலகங்கள், தனியார் வணிக முறை நூலகங்கள், நடமாடும் நூலகங்கள் என நூலகங்கள் தனித்தனியாக பிரிக்கப்படுகின்றன. நூலகத்தில் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கல்வி, பொருளியல், மருத்துவம், வரலாறு, ஆன்மிகம், உளவியல், பொறியியல் போன்ற துறை சார்ந்த நூல்கள் நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். மேலும் நூலகத்தில் நாளேடுகள், பருவ இதழ்கள் போன்றவற்றையும் நாம் படிக்கலாம்.

முடிவுரை:

உலகமானது நவீன காலத்தில் மாறியதால் நூலகம் சென்று படிப்பது இப்போது அரிதாகிவிட்டது. இது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி. நூலகம் சென்று நூல் வாசிப்பதை பழக்கிக்கொள்ள வேண்டும். பேரறிஞர் அண்ணா கூறியது போல வீட்டிற்கு ஒரு புத்தகச்சாலை இருத்தல் வேண்டும். அறியாமை எனும் இருளை நீக்க கண்டிப்பாக நூலகம் சென்று நூல்கள் படிக்க வேண்டும்.

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil