பாரதி கண்ட புதுமைப்பெண் கட்டுரை

Advertisement

Bharathi Kanda Puthumai Pen Pechu Potti Katturai

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இந்த பதிவில் உலகம் போற்றும் மாபெரும் கவிஞன் “பாரதி கண்ட புதுமைப்பெண் கட்டுரை” பதிவை காணலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாரதியார் பற்றிய 10 வரிகள்

பாரதி கண்ட புதுமைப்பெண் கட்டுரை

குறிப்புச் சட்டகம்:

  1. முன்னுரை
  2. புரட்சியின் அடிப்படை
  3. பெண்களின் உரிமைகள்
  4. இன்றைய பெண்கள்
  5. முடிவுரை

முன்னுரை:

இந்த சமூகத்தின் சாபக்கேடான பெண்ணடிமை தனத்தை உடைத்தெறிய இந்த உலகத்தில் பிறந்த உன்னதமான மனிதம் மகாகவி சுப்ரமணிய பாரதியார் என்பது பொருத்தமானது.

இவர் இந்த சமூகத்தை மாற்றி அமைக்க கூடிய அற்புதமான போராற்றல் மிக்க புதுமை பெண் என்ற வடிவத்தை பெருங்கனவாக கொண்டு ஒப்பற்ற பல இலக்கியங்கள் மூலம் தற்கால பெண்ணிய சிந்தனைகளுக்கு ஒரு விதையினை அன்று போட்டவர்.

புரட்சியின் அடிப்படை:

காலம் காலமாக பெண் இனமானது சில ஆணாதிக்கம் நிறைந்தவர்களால் இன்னல்கள் பலவற்றை அனுபவித்து வருகின்றனர். இதனை அக்காலத்து மடமைகள் நிறைந்த வழக்கங்கள் வழிமொழிந்தன.

இவை  தான் எமது சமூக முன்னேற்றத்தை தடுக்கின்றன. என்பதை எனக்குணர்ந்த பாரதியார் பெரும் புரட்சிகர புயலாக தமிழகம் எங்கும் வீசினார்.

பாரதியார் தம் எதிர்பார்ப்பு, ஏக்கம், கனவு, கற்பனை, குறிக்கோள், வேட்கை போன்ற அனைத்தையும், சமவிகிதத்தில் கலந்து உருவாக்கிய கற்பனை வடிவமே “புதுமை பெண்” ஆகும்.

இவர் ஒரு புதுமை பெண் என்கின்ற அக்கினி குச்சியால் இந்த சமூகத்தின் இன்னல்கள் அடியோடு துடைக்கப்படும் என்றெண்ணி புதுமை பெண்கள் என்ற கனவு வடிவத்தை தனது கவி வரிகள் மூலம் உருவாக்கினார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாரதியார் சிறப்புகள் சில வரிகள்..!

பெண்களின் உரிமைகள்:

பெண்கள் இந்த சமூகத்தின் பல வடிவங்களிலும் இந்த சமூகத்தவர்களால் வஞ்சிக்கப்பட்டு பல இன்னல்களை சகித்து கொண்டு வாழும் நிலையானது காணப்பட்டது. அவர்களுக்கான கல்வி மறுக்கப்பட்டது. சுதந்திரம் பறிக்கப்பட்டது.

இளம் வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டது, கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறும்படி செய்யப்பட்டது. இவற்றையெல்லாம் எதிர்த்து பெண்களுக்கு கல்வி உரிமை சுதந்திரமாக வாழும் உரிமை ஆண்களுக்கு நிகராக பெண்களும் வாழ்கின்றன முற்போக்கு சிந்தனையின் விதையினை பாரதி விதைத்ததார்.

இன்றைய பெண்கள்:

இன்றைய காலத்து பெண்கள் பல வழிகளிலும் சுதந்திரம் பெற்றிருக்கிறார்கள். கல்வி உரிமை எல்லா துறைகளிலும் வேலை செய்யவும் குடும்பங்களை நிர்வகிக்கவும் தலைமைத்துவம் நிறைந்தவர்களாகவும் ஒரு நிவீனத்துவ பெண்களாக காணப்படுகின்றனர்.

ஆயினும் இன்றுவரை பெண்களை அடிமைப்படுத்த நினைக்கும் சில முட்டாள்தனமான செயற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருப்பது சாபக்கேடுகளாகும்.

முடிவுரை:

பாரதி கண்ட புதுமை பெண்கள் என்பவர்கள் மிகவும் உன்னதமானவர்கள் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் வெறுமனே இன்றைய காலத்து நாகரீக வயப்பட்டவர்கள் அல்லர்.

புதுமை பெண்கள் என்ற பெயரில் இன்று கலாச்சார சீர்கேடுகளும் ஒழுக்கமற்ற நடத்தைகளையும் வெளிப்படுத்துகின்ற பெண்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

தானும் தன்னை சார்ந்த சமூகமும் சிறப்புற வாழ நினைப்பவளே போற்றுதலுக்குரிய புதுமைப்பெண் ஆவாள் அதை தான் பாரதியாரும் விரும்பி இருந்தார் என்பது வெளிப்படை.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாரதியார் கட்டுரை

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement