பாய்ச்சல் கட்டுரை Class 10

Advertisement

Paichal Katturai in Tamil Easy

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பாய்ச்சல் கட்டுரை  பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். எந்தவொரு விஷயத்தையும் நாம் கட்டுரை வடிவிலோ அல்லது கவிதை வடிவிலோ அல்லது பாடல் மூலமாக தெரிவிப்பதன் மூலம், அதனை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் இப்பதிவில் பாய்ச்சல் கட்டுரை பற்றி படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வணக்கம்.. நீங்கள் பாய்ச்சல் கட்டுரை பற்றி வலைத்தளங்களில் தேடிக்கொண்டு இருக்கிறீர்களா அப்படி என்றால் எந்த பதிவு உங்களுக்கானது தான். ஆம் மாணவ மாணவிகளே இங்கு பாய்ச்சல் பற்றிய கட்டுரை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை படித்து பயன்பெறுங்கள்.

பாய்ச்சல் என்னும் கதையைச் சுருக்கி எழுதுக.? 

குறிப்புச்சட்டகம்:

  • முன்னுரை
  • தெரு முனை
  • கண்காட்சி
  • சதங்கை மேளம்
  • அனுமாரின் அதிசய நடனம்
  • அழகு அனுமார் அருகில்
  • அனுமாரின் ஓய்வு
  • அழகின் ஆட்டம்
  • முடிவுரை

முன்னுரை:

சா.கந்தசாமி சிறுகதை, புதினம் எழுதுவதில் வல்லவர். விசாரணை கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றவர். அவருடைய பாய்ச்சல் கதை நுட்பமான உணர்வுகளின் உறைவிடமாக விளங்குகிறது. காலை ஈடுபாட்டின் முழுமையை இக்கதையில் நாம் காண்கிறோம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி கட்டுரை

தெரு முனை:

விதிகளில் அன்றாடம் எத்தனையோ கலை நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. சாதாரண எளிய மக்களின் பொழுதுபோக்கு வீதிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்ப்பதே. அனுமார் போல வேடமிட்டு அனைவரையும் மகிழ்வித்து ஒரு கலைஞனைக் குறித்து இக்கதை பேசுகிறது.

கண்காட்சி:

அனுமார் குரங்கு போல ஓடி வந்தார். வலது காலையும், இடது காலையும் மாறி மாறித் தரையில் உதைத்து வேகமாகக் கைகளை வீசி,  ஆரம்பித்தார். ஒரு கடையில் தொங்கிய வாழைத்தாரிலிருந்து பழங்களைப் பறித்து எட்டியவர்களிருக்கெல்லாம் கொடுத்தார். அழகுக்கும் ஒரு பழம் கிடைத்தது.

சதங்கை மேளம்:

சதங்கையும் மேளமும் தாளமும் நாதசுரமும் ஒன்றாக இசைந்தன. அனுமார் தாவிக் குதித்துக் குறுக்கும் நெடுக்குமாகப் பாய்ந்து சென்றார். நீண்ட வாழ் மேலே சுழன்று சரேலென்று தரையில் படர்ந்தது புழுதியை கிளப்பியது.

அனுமாரின் அதிசய நடனம்:

அனுமார் ‘கீச் கீச்’ என்று கத்திக் கொண்டே பந்தல் காலைப்பற்றி மேலே சென்றார். மரத்தின் மேலே ஏறிப் பந்தலில் மறைந்தார். திடீரென்று மேளமும், நாதசுரமும் துரித கதியில் ஒலிக்கத் தொடங்கின அனுமார் பந்தல் கால் வழியாக கீழே குதித்தார் கைகளை தரையில் ஊன்றி அனுமார் காரணமடித்தார். காரில் வந்த ஒருவன் கொடுத்த பணத்தை அனுமார் மேளக்காரனை பார்க்க, அவர் வாங்கிக் கொண்டார்.

அழகிய அனுமார் அருகில்:

அனுமார் அருகில் அழகு சென்றான். வாலை பிடித்துப் பார்த்தான். அனுமாரோடு இவனால் நடக்க முடியவில்லை. அனுமார் திரும்பவும் ஆட ஆரம்பித்தார் பதுங்கியும் பாய்ந்தும் ஆடினார். ஆட ஆட புழுதிப் புகை போல எழுந்தது.

அனுமாரின் ஓய்வு:

ஆட்டம் முடிந்தது. ஆற்றங்கரையையொட்டி சின்னக்கோவில் பெக்கம் அனுமார் தன வேடத்தை கொஞ்சம் கொஞ்சமாக களைத்தார். அனுமார் இருமிக் கொண்டே இருப்பதாய் அழகு கவனித்தான். அழகு அனுமாரைப் பார்த்து “எனக்குக் கூட உங்களை மாதிரி ஆடனுமுன்னு ரொம்ப ஆசைங்க” என்றான். அதற்கு அவர், “எங்க ஒரு சின்ன ஆட்டம் ஆடிக்காட்டு. ஒனக்கு வருமான்னு பார்க்கறேன் சலங்கையைக் கட்டிக்கிட்டே ஆடு” என்றார்.

அழகின் ஆட்டம்:

முதலில் மரத்திலிருந்து கீழே குதிக்கும் ஆட்டத்தை ஆடினான் அழகு. அழகின் ஆட்டம் தாளகதிக்கு ரொம்பவும் இணங்கி வருவது அனுமாருக்கு மகிழ்ச்சியளித்தது. அழகு பற்களெல்லாம் தெரிய சப்தமாகச் சிரித்து கைகளை ஆட்டி எம்பி எம்பி காற்றில் மிதப்பது போல் முன்னே வந்தான். அவனைப் பிடிக்கப் பாய்ந்த அனுமார் கால் தடுக்கி கீழே விழுந்தார். அழகோ தன் ஆட்டத்தில் மூழ்கி உற்சாகம் பொங்க ஆடிக் கொண்டிருந்தான்.

முடிவுரை:

ஒரு கலைஞன் இன்னொரு கலைஞனை உருவாக்கும் உன்னத நிகழ்வு அங்கே நடந்தது. கலைஞரின் கலை ஈடுபாட்டில் அவனுக்கு வயதோ, உடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தன் கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகிறபோது அவன் கொள்கிற மகிழ்ச்சியும் பெருமிதமும் அளப்பரியது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கோபல்லபுரத்து மக்கள் கட்டுரை Class 10

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement