பூமியின் வயது பற்றிய சுவாரசியமான தகவல்கள்…

Advertisement

பூமியின் வயது 

நாம் வாழும் பூமி தோன்றி எவ்வளவு காலம் ஆகிறது? இந்த கேள்வி நம்மில் பலரிடம் இருக்கத்தான் செய்யும். இப்போது நிலவிலும் மனிதன் வாழ முடியுமா ? அல்லது வேறு எந்த கிரகத்தில் மனிதன் வாழமுடியும் இப்படி பல ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது. நம்மை போல் ஏதோ ஒரு கிரகத்தில், ஒரு உயிர் வாழ சாத்திய கூறுகள் இருக்கலாம். இந்த ஆராய்ச்சியின் விளைவாக பிற்காலத்தில், மனிதன் செய்வாயிலோ நிலையிலோ வாழ்ந்தால் ஆச்சரியம் இல்லை. அதை பொல் நாமும் ஒரு ஆராய்ச்சியின் விளைவாக பூமியில் வாழ்ந்தால் எப்படி இருக்கும். பூமிபோல் சந்திரன் போல் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கிரகணத்தை ஒரு நட்சத்திரத்தை கண்டறிகிறார்கள். அந்த வகையில் நாம் வாழும் பூமி எப்போது கண்டறியப்பட்டிருக்கும். வாருங்கள் இந்த பதிவில் பூமியை பற்றிய பல சுவாரசியமான தகவல்களை அறிந்துகொள்வோம்.

நாம் வாழும் பூமியின் வயதுதான் என்ன ?

age of the earth in tamil

“சுமார் இருநூறு கோடி ஆண்டுகள் முன்பு பூமி தோன்றியிருக்கவேண்டும்” என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

அதாவது, யூரேனியம் என்பது ஓர் உலோகம். தோரியம் என்பது மற்றோர் உலோகம். இவை இரண்டும் சேர்ந்து ஈயமாக மாறுகின்றது.

இப்படி மாறிய ஈயத்தின் அளவைக் கொண்டு பூமியின் வயதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

உலகத்திலே மொத்தம் எவ்வளவு ஈயம் இருக்கிறது? இவ்வளவு ஈயமும் உருவாக எவ்வளவு காலம் தேவைப்படும்?

இதுவே, புவி இயல் அறிஞர்கள் போட்ட கணக்கு.

ஓர் ஆண்டுக் காலத்திலே ஒரு கிராம் யூரேனியத்திலிருந்து 1/7, 600,000,000 கிராம் ஈயம் கிடைக்கிறது.

ஒரு கிராம் தோரியத்திலிருந்து ஒரு வருஷ காலத்தில் 1/28, 000,000,000 கிராம் ஈயம் கிடைக்கிறது.

உலகத்திலே மிகப் பழமையான ஈயப் பாறை எதுவோ அதன் வயது நூற்று எண்பத்து ஐந்து கோடி வருஷங்கள் என்று தெரிய வந்தது.

இதுமட்டுமா இல்லை, கடலின் வயதை கணக்கிடுதல் பூமியின் வயதை கண்டறியலாம் என ஆராய்ந்த அறிஞர்கள்

நாம் வாழும் பூமி, அதன் முக்கால் பகுதி கடல். கால் பகுதி நிலபரப்பை கொண்டது.

கடலின் வயதைக் எப்படி கண்டுபிடிப்பது?

கடலின் மூலமே உப்புதான், அதனால் உப்பை கொண்டு கடலின் வயதை கண்டறியலாம் என ஆராய்ச்சிகள் மேற்கொள்ள பட்டது.

முதலில் கடலுக்கு உப்பு எப்படி வந்தது. எங்கிருந்து வந்தது ? இதனை கண்டறிந்தால் கடலின் வயதை கண்டறியலாம். கடலின் வயதை கண்டறிந்தால் பூமியின் வயதை கண்டறியலாம்.

மழைகள் உருண்டோடி கடலை கலக்கிறது. அது கடலை கலக்கும் போது மண்ணையும் கரைத்துக்கொண்டு அல்லவா செல்கிறது. அந்த மண்ணில் தான் உப்பும் இருக்கிறது. உப்பு நீரில் கரைந்து விடுகிறது. மண் கரைவது இல்லை.

சூரிய வெப்பத்தினாலே, கடல் நீர் ஆவியாகி. ஆவி, மழையாகப் பொழிகிறது. மழை நீர் ஆறாக மாறுகிறது. ஆறுகள் மூலம் மீண்டும் கடலை அடைகிறது. இந்த நிகழ்ச்சி ஓய்வில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது.

இதனால் ஆறுகள் கடலில் கொண்டு போய் சேர்க்கும் உப்பின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே இருக்கிறது.

உலகத்தில் உள்ள ஆறுகள் எல்லாமாகச் சேர்ந்து மொத்தம் நாற்பது கோடி டன் உப்பை ஆண்டு தோறும் கடலில் சேர்த்து வருகிறது என்கிறது ஆய்வுகள்.

இந்தக் கணக்குப்படி பார்த்தால் கடலின் வயது சுமார் இரு நூறு கோடி ஆண்டுகளுக்கு மேல்  தெரிகிறது.

எனவே, பூமியின் வயதும் கடலின் வயதும் ஒன்றாக கணக்கிடப்படுகிறது . அதாவது பூமியின் வயது இரு நூறு கோடி ஆண்டுகள்.

பென்சில் எங்கு எப்படி கண்டுபிடிக்கபட்டது தெரியுமா…..

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து  கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –>  Thinking 

 

Advertisement