பென்சில் உருவான வரலாறு
நாம் பயன்படுத்து அணைத்து பொருட்களுமே எப்படி உருவாகி இருக்கும் என்ற கேள்வி நமக்குள் இருந்துகொண்டே தான் இருக்கும். ஆனால் அதற்கான பதிலை நம்மில் பலர் தேடுவது இல்லை. ஒரு பொருள் ஈஸியாக பயன்படுத்த கூடிய நிலையை அடைய பல மாற்றங்களை பல வருடங்கள் தாண்டித்தான் வந்திருக்கும். உதாரணத்திற்கு நாம் அனைவரும் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் இந்த நிலையை அடைய ஆரம்ப புள்ளி யார் என்றால் நமக்கு தெரிவது என்பது சந்தேகம் தான். அதுபோல தான் நாம் சிறுவயது முதல் பயன்படுத்தும் பென்சில் உருவான கதை தெரியுமா. நாம் இன்று பயன்படுத்தக்கூடிய பென்சில் இந்த வடிவத்தை அடைய 500 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. எதிர்பாராதவிதமாக கண்டறியப்பட்ட கிராபைட்டில் இருந்து தான் பென்சில் பயணம் துவங்கியது. பல வருடங்கள் கடந்தும் நாம் ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கிய பங்காற்றிக்கொண்டு இருக்கிறது பென்சில். இப்படி அனைவரின் கைகளிலும் தவழ்ந்த பென்சில் உருவான கதையை தெரிந்துகொள்வோம் வாருங்கள்….
when was the pencil invented in tamil:
16 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டின் ஒரு பகுதியில் சாய்ந்து விழுந்த மரத்தின் அடிப்பகுதியில் படிந்து இருந்த சாம்பல் நிற உலோகம் தான் கிராபைட்.
வேதிப்பொருள்கள் குறித்த அறிமுகமற்ற மக்கள் லெட் என்ற பொருளைக்கொண்டு ஒரு பேப்பரில் குறியீடுகளை வரைவதை விட கிராபைட் கொண்டு வரைந்தால் அதிக கறுப்பு நிறத்தை தருவதை மட்டும் அறிந்துவைத்திருந்தனர் ரோமானியர்கள். ரோமானியர்கள் காலத்தில் இதனை அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ஆங்கிலேயர்கள் கிராபைட் கட்டிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி குச்சிகளில் பொருத்தி எழுத பயன்படுத்துகிறார்கள்.
வணிக நோக்கில் கிராபைட் கட்டிகளை காகிதங்களில் சுற்றி வெளியில் விற்கவும் செய்துள்ளனர்.
பென்சில் பெயர் வர காரணம்:
அப்போதுதான் அதற்கு பென்சில் என பெயர் வந்தது.
தரமான பிரஷ் என்பதற்கு லத்தின் மொழியில் பென்சிலியம் என்று பெயர். பென்சிலியம் என்ற பெயர் சுருக்கமே பென்சில் என மாறியது.
கிபி 1600 களில் இங்கிலாந்து நாட்டின் கெஸ்விக் பகுதியைச் சேர்ந்த ஒரு தச்சர் கிராபைட் துண்டுகளுக்கு இருபுறமும் மரக்கட்டையை வைத்து ஒரு பென்சிலுக்கு ஒரு புதிய வடிவத்தை கொடுத்தார்.
பென்சில் உற்பத்தி மற்றும் கிராபைட் ஏற்றுமதியில் இங்கிலாந்து முன்னனி வகித்தது. இதற்கு போட்டியாக ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் கிராபைட் கண்டறியப்பட்டது. ஆனால் இங்கிலாந்தில் கிடைத்த கிராபைட் தரத்தை விட ஐரோப்பாவில் கண்டறியப்பட்ட கிராபைட் தரம் குறைவாக இருந்ததால், இங்கிலாந்து தொடர்ந்து முன்னிலை வகித்தது.
இங்கிலாந்தில் கிராபைட் குறையாமல் இருக்க 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை 6 வாரம் மட்டும் கிராபைட் வெட்டி எடுக்கும் வேலை மேற்கொள்ளப்பட்டது.
புதிய வடிவத்தில் பென்சில்:
1793 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாடு பிரான்சு நாட்டின் மீது போர் தொடுத்தது. அந்த காலகட்டத்தில் பென்சில் இறக்குமதியை அதிக அளவு பிரான்ஸ் செய்தது.
போர் காரணங்களால் பிரான்ஸ் நாட்டுக்கு பென்சில் ஏற்றுமதியை ரத்து செய்தது இங்கிலாந்து. இதனால் பிரான்சில் பென்சில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இங்கிலாந்திலும் ஏற்றுமதியை தடை செய்ததால் இழப்பு ஏற்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் பென்சில் தட்டுப்பாட்டை குறைக்க நிக்கோலாஸ்-ஜாக் கான்டே [Nicolas-Jacques Conte] என்ற அறிவியல் அறிஞர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அவரது முயற்சியில் பென்சிலில் ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். இதுவரைக்கும் வெறும் கிராபைட் துண்டுகளை மட்டும் பயன்படுத்துவதற்காக பதிலாக, கிராபைட் உடன் கிளே [clay] கலந்து பயன்படுத்தலாம் என்று கண்டறிந்தார்.
கிளே பயன்படுத்துவதால் பென்சிலின் அடர்த்தி மாறுபடுவதை கண்டுபிடித்தார்.
குறைவான அளவு கிளே மற்றும் அதிக அளவு கிரைபைட் பயன்படுத்தி அடர்த்தியாக எழுதும் பென்சிலை உருவாக்கினார.
மற்றும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பென்சில் வடிவமானது இரண்டு மர தூண்களுக்கு இடையே கிராப்பைடை ஒட்டி பயன்படுத்துவது போன்று இருந்தது. இதனை மாற்றி மரக்கட்டையின் இடையே ஒரு துளையிட்டு அதில் கிராபைட் மற்றும் கிளே கலவையை சேர்த்து பயன்படுத்த ஆரம்பித்தனர்.
1795 ஆம் ஆண்டு இந்த வடிவத்திற்கு காப்புரிமை பெறப்பட்டது. நாம் இன்று பயன்படுத்தும் 1HB, 2HB பென்சிலின் முன்னோடி கான்டே என்பவரின் கண்டுபிடிப்புதான்.
சாப்பிட்டவுடன் உங்களுக்கு தூக்கம் வருகிறதா…அப்போ அதற்கு காரணம் இது தான்
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |