வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பஞ்சு மிட்டாய் எப்படி உருவாகிறது தெரியுமா..?

Updated On: June 2, 2023 10:01 AM
Follow Us:
How Cotton Candy is Made in Tamil
---Advertisement---
Advertisement

How Cotton Candy is Made in Tamil

ஹலோ நண்பர்களே..! உங்களுக்கு பஞ்சு மிட்டாய் என்றால் பிடிக்குமா..? இப்படி எல்லாம் கேட்க கூடாது என்று சொல்வீர்கள். ஏனென்றால் யாருக்கு தான் பஞ்சு மிட்டாய் பிடிக்காமல் இருக்கும் சொல்லுங்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பஞ்சு மிட்டாய் வாங்கி சாப்பிட ஆசைப்படுவார்கள். இவ்வளவு ஏன் 90s kids -ன் நீங்கா நினைவுகளில் இதுவும் ஓன்று. சரி அதை விடுங்க. இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தான். சரி நாம் கடற்கரைக்கு செல்லும் போதோ அல்லது ஏதாவது திருவிழாவிற்கு செல்லும் போதோ அங்கு பஞ்சு மிட்டாய் விற்பதை பார்த்திருப்போம். பார்த்த உடனே அதை வாங்கி சாப்பிட்டு இருப்போம். ஆனால் பஞ்சு மிட்டாய் எப்படி உருவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? தெரிந்து  கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

பஞ்சு மிட்டாய் எப்படி உருவாகிறது..? 

How Cotton Candy is Made

பொதுவாக நாம் வாங்கி சாப்பிடும் பஞ்சு மிட்டாய் பருத்தி மிட்டாய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பஞ்சு மிட்டாயை கண்டுபிடித்தவர் ஒரு பல் மருத்துவர் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா..?

ஆனால் அது தான் உண்மை. 1897 ஆம் ஆண்டில் வில்லியம் மோரிசன் டென்னசி மிட்டாய் தயாரிப்பாளர் ஜான் வார்டனுடன் இணைந்து இந்த கலவையை உருவாக்கினார். இருவரும் 1908 -இல் உலக கண்காட்சியில் பஞ்சு மிட்டாய்களை அறிமுகப்படுத்தினர். அப்போது இதன் விலை 25 காசுகள் மட்டுமே.

சரி பஞ்சு மிட்டாய் எப்படி உருவாகிறது என்று ஒரு கேள்வி இருக்கும். அதை பற்றி இங்கு காண்போம்.

மனிதர்களால் நீருக்குள் இருக்கும் போது ஏன் மூச்சு விட முடியவில்லை..

How Cotton Candy is Made

அதுபோல பஞ்சு மிட்டாய் இரண்டு பொருட்களிலிருந்து மட்டுமே தயாரிக்கப்படுகிறது. ஓன்று காற்று மற்றொன்று வண்ண சர்க்கரை.

முதலில் பஞ்சு மிட்டாய் இயந்திரத்தின் மையத்தில் சுவையான சர்க்கரை சேர்க்கப்படுகிறது. பின் சுழலும் மையம் 300 டிகிரி வரை வெப்பமடையத் தொடங்குகிறது மற்றும் சர்க்கரை உருகுகிறது. மையம் சுழலத் தொடங்கும் போது, ​​உருகிய சர்க்கரை ஒரு திரையின் வழியாக தள்ளப்படுகிறது. இது பருத்தி மிட்டாய் போல மெல்லிய நூல்களாக மாறுகிறது. 

பின் நமக்கு இது பஞ்சு மிட்டாயாக கிடைக்கிறது. அதுபோல இந்த பஞ்சு மிட்டாய்க்கு அதிக சுவையை தருவது எத்தில் மால்டோல் எனப்படும் செயற்கை சுவை தான். இது பஞ்சு மிட்டாய் சுவையில் முக்கிய மூலப்பொருள் ஆகும்.

அதுபோல பஞ்சு மிட்டாய் வெப்பமான பகுதியில் இருந்தாலோ அல்லது குளிர்ச்சியான பகுதியில் இருந்தாலோ அது விரைவாக உருகத் தொடங்குகிறது. இப்படி தான் பஞ்சு மிட்டாய் உருவாக்கப்படுகிறது.

ரயில் புறப்படும் போது ஏன் பச்சை கொடி காட்டுகிறார்கள் தெரியுமா

 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How Did The Name Tirupati Laddu Come About in Tamil

திருப்பதி லட்டுக்கு பெயர் எப்படி வந்தது..?

கார்த்திகை நாளில் சொக்கப்பனைகொளுத்துவது ஏன் தெரியுமா?

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏன் பெண்கள் போகக்கூடாது தெரியுமா.?

The Reason For its Name is Lemon in Tamil

எலுமிச்சை பழத்திற்கு எலுமிச்சை பழம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா..?

why is ganesh idol immersed in water in tamil

விநாயகர் சதுர்த்தி முடிந்து, பிள்ளையார் சிலையை ஏன் நீரில் கரைக்கிறார்கள் தெரியுமா..?

why aani month has 32 days in tamil

ஆனி மாதத்தில் மட்டும் ஏன் 32 நாட்கள் வருகிறது தெரியுமா?

punnai tree in tamil

புன்னை மரம் எப்படி இருக்குமுன்னு உங்களுக்கு தெரியுமா.?

Hat Trick Meaning in Cricket

கிரிக்கெட்டில் எதுக்கு Hat Trick என்று சொல்கிறார்கள்..! இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன..?

Why does applying honey on the head turn white in tamil

தேனை முடியில் தடவினால் முடி நரைத்து விடுமா..? இது உண்மையா..? பொய்யா..?