எலுமிச்சை பழத்திற்கு எலுமிச்சை பழம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா..?

Advertisement

The Reason For its Name is Lemon in Tamil

வணக்கம் நண்பர்களே. இன்றைய பதிவு அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக தான் இருக்கும். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் பின்னால் ஒரு பெயர் காரணம் இருக்கும். ஆனால் அது நம்மில் பலபேருக்கு தெரியாது. அப்படி நம்மில் பலபேருக்கு தெரியாத ஒன்றுதான் எலுமிச்சை பழம். ஆமாங்க எலுமிச்சை பழம் என்று நாம் அனைவரும் அழைத்து வருகிறோம். ஆனால் ஏன் அப்படி அழைக்கிறோம் என்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா..? அப்படி நீங்கள் யோசித்து இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளளதாக இருக்கும். சரி வாருங்கள் அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

மாம்பழம் என்ற பெயர் எப்படி வந்தது இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா 

எலுமிச்சை பழம் பெயர் காரணம்:

எலுமிச்சை பழம்

அக்காலத்தில் எலுமிச்சை பழத்திற்கு நல்ல பெயர் காரணம் தான் வைத்து இருக்கிறார்கள். நாம் தான் பேச்சு வழக்கில் இதனை எலுமிச்சை பழம் என்று அழைத்து வருகிறோம்.

எலி ஆனது, எல்லா பழங்கள், காய்கள் என எல்லாவற்றையும் சாப்பிட்டு நாசம் செய்து விடும். ஆனால் எலுமிச்சை பழம் இருக்கிற பக்கம் கூட போகாதாம். ஏனென்றால் அதில் இருக்கும் சிட்ரஸ் அமிலம் அதற்கு ஆகாதாம்.

 எலி எல்லா பழத்தையும் தின்று எலுமிச்சை பழத்தை மட்டும் மிச்சம் வைத்து விடுமாம். எனவே இப்பழத்தை எலி மிச்சம் வைத்த பழம் என்று கூறி வந்தார்கள். ஆனால் காலப்போக்கில் எலி மிச்சம் வைத்த பழம் என்பது எலுமிச்சை பழம் என்று மாறிவிட்டது. 

எலி மிச்சம் வைத்த பழம் ⇒ எலுமிச்சை பழம்

மேலும் எல்/எலு என்பது மஞ்சள் நிறத்தையும், மிச்சு/மிச்சை என்பது மிஞ்சி நிற்கும் பண்பையும் குறிக்கிறது. எனவே அடர் மஞ்சள் நிறத்தில் உள்ள பழம் எலுமிச்சை பழம்.

சிக்கன் 65 என்று பெயர் வருவதற்கு என்ன காரணம் தெரியுமா

எலுமிச்சையில் உள்ள சத்துக்கள்:

எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக உள்ளன. அதிக எடை உடையவர்கள், கொலஸ்ட்ரால், நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் தினமும் எலுமிச்சைசாறு அருந்துவது நல்லது.

எலுமிச்சை சாறு அருந்துவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement