ஏன் விளக்கு வைத்த நேரத்தில் ஒருவருக்கு பணம் கொடுக்கக்கூடாது என்று கூறுகிறார்கள் தெரியுமா..?

Advertisement

Why Don’t You Pay After The Lamp is Installed or Not  

பொதுவாக நாம் அன்றாடம் செய்யும் செயல்களை கூட எந்த நேரத்தில் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று கூறுவார்கள். ஏனென்றால் அந்த காலத்தில் பெரும்பாலும் நவீன வசதி என்பது அதிகமாக கிடையாது. அதனால் நம் முன்னோர்களின் காலத்தில் இருந்த வாழ்க்கை முறையும், தற்போது நாம் வாழும் வாழ்க்கை முறையும் வேறு வேறாக இருப்பதனால் நமக்கு இவை எல்லாம் கொஞ்சம் புதியதாக தெரியும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அந்த காலத்தில் கூறப்பட்ட ஒவ்வொரு பழக்க வழக்கத்திற்குமே ஏதோ ஒரு உண்மையான காரணம் ஆனது காணப்படுகிறது. ஆனால் நம்மில் பலருக்கு அதற்கான காரணமோ அல்லது சரியான விளக்கமோ தெரிவது இல்லை. அப்படி பார்த்தால் இன்றளவும் கூட அனைவருடைய வீட்டிலும் விளக்கு ஏற்றிய பிறகு பிறருக்கு பணம் கொடுக்கவோ அல்லது வாங்கவோ கூடாது என்று கூறுவார்கள். இதற்கான உண்மையான காரணம் என்ன என்பதை இன்றைய பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!

துக்க வீடுகளில் பறை அடிப்பதற்கான காரணம் என்ன தெரியுமா 

விளக்கு வைத்த நேரத்தில் யாருக்கும் பணம் கொடுக்கக்கூடாது என்பதற்கான காரணம்:

நம்முடைய வீடுகளில் மாலை நேரம் வந்தால் பூஜை அறையில் விளக்கு ஏற்றி பத்தி, சாம்பிராணி மற்றும் சூடம் எல்லாம் ஏற்றுவது வழக்கமாக இருக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் மஹாலஷ்மி அம்மையாரின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது.

 why don't you pay after the lamp is installed in tamil

அப்படி பார்த்தால் விளக்கு ஏற்றிய பிறகு பிறருக்கு பணம் கொடுக்கவோ அல்லது வாங்கவோ கூடாது என்று நம் முன்னோர்களை கூறியதை நாம் பின்பற்றி வருகிறோம். ஒருவேளை அப்படி கொடுத்தால் வீட்டிற்கு லட்சுமி கடாச்சம் இருக்காது என்று கூறுவார்கள். இதற்கான காரணம் என்ன தெரியுமா..?

நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் மின்சார வசதி என்பது அந்த அளவிற்கு இருக்காது. ஒருவேளை அப்படி இருந்தாலுமே கூட  குறைவான அளவு மட்டுமே வெளிச்சத்தினை அளிக்கும்.

எனவே சூரியன் மறைந்த பிறகு வெளிச்சம் என்பது அந்த அளவிற்கு இருக்காது என்பதால் விளக்கு ஏற்றிய பிறகோ அல்லது அத்தகைய நேரத்தில் பணம் எண்ணி கொடுப்பதன் ஒருவருக்கு அதிகமாக அல்லது குறைவாக பணம் கொடுத்தேன் என்ற பிரச்சனைகள் வரும் என்பதே இதற்கான காரணம் ஆகும். 

ஒரு வேளை அதையும் மீறி பணம் கொடுத்தால் வீட்டின் லட்சுமி போய்விடும் என்று கூறுவது பணத்தினை கருத்தில் கொண்டே மட்டுமே ஆகும். ஆகவே வீட்டில் விளக்கு வைக்கும் நேரத்தில் பணம் கொடுக்கக்கூடாது என்று கூறுவதற்கான காரணம் ஆகும்.

சாப்பிட்டவுடன் உங்களுக்கு தூக்கம் வருகிறதா…அப்போ அதற்கு காரணம் இது தான் 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து  கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –>  Thinking 
Advertisement