ஏன் AC ஓடும் போது FAN போட கூடாது..

Advertisement

AC ஓடும் போது Fan போடலாமா.! | AC Odum Pothu Fan Podalama

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் AC ஓடும் போது Fan போடலாமா.? போடக்கூடாதா.? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். இன்றைய கால கட்டத்தில் வெயிலை சமாளிப்பதற்கு ஏர் கூலர், ac என்று வாங்கி மாட்டுகிறோம். அவற்றை எல்லாம் பயன்படுத்துனாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. முக்கியமாக பெரும்பாலானவர்களுக்கு இருக்க கூடிய சந்தேகம் ac ஓடும் போது fan போடலாமா.! போட கூடாது என்று யோசிப்பீர்கள். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் பதிவாக இந்த பதிவு இருக்கும். சரி வாங்க பதிவை படித்து ac ஓடும் போது fan போடலாமா, போட கூடாதா என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

AC ஓடும் போது Fan போடலாமா, போட கூடாதா:

AC ஓடும் போது FAN போடலாமா, போட கூடாதா என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் AC எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

கார்ல ஏசியை போடுவதற்கு முன் இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..

 AC-யின் மேல் பகுதியில் சூடான காற்றை உள்ளிழுக்கும், கீழ் பகுதியில் குளிர்ந்த காற்று வெளியாகும். அடர்த்தி குறைவாக இருப்பதால் எப்பொழுதுமே சூடான காற்றும் மேல் பகுதியில் இருக்கும். அதுவே அடர்த்தி அதிகமாக இருப்பதால் கீழ் பகுதியில் குளிர்ந்த காற்று வெளியாகிறது. இந்த சூடான காற்று மேல் பகுதியில் இருப்பதால் நாம் FAN போடாமல் இருந்தால் அறை முழுவதும் இருக்கும் சூடான காற்றையும் உள்ளிழுத்து அறையை விரைவாகவே குளிர்ச்சி அடைய செய்யும். 

அதுவே நாம் FAN போடும் போது சூடான காற்று, குளிர்ந்த காற்று இரண்டும் சேர்வதால் AC சூடான காற்றை எடுத்து கொள்வதற்கு நேரமாகும், இதனால் அறையும் குளிர்ச்சி அடைவதற்கும் நேரமாகும். இதனால் தான் AC ஓடும் போது FAN போட கூடாது. இதை படித்து விட்டு நீங்கள் AC ஓடும் போது FAN போடுவதும், போடாமல் இருப்பதும் உங்களின் இஷ்டம் நண்பர்களே.! ஆனால் Fan போடாமல் இருப்பது நல்லது.

24 மணி நேரம் ஏசி ஓடுவதால் கரண்ட் பில் அதிகரிப்பா?

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 

 

Advertisement