டாய்லெட்ல இதை மட்டும் போட்டு பாருங்க 1 நிமிடத்தில் பளபளன்னு மின்னும்..!

Advertisement

Bathroom Cleaning Tips and Tricks

சுத்தம் செய்யும் வேலையிலேயே மிகவும் கஷ்டமான வேலை எதுவென்றால் அது டாய்லெட் சுத்தம் செய்யும் வேலை தான். ஏன் என்றால் அந்த இடத்தில் நிரைய கறைகள் படிந்திருக்கும், மேலும் கொஞ்சம் துர்நாற்றமும் வீசும். இதன் காரணமாகவே பெரும்பாலானவர்களுக்கு டாய்லெட் சுத்தம் செய்வது என்பது பிடிக்காத வேலை ஆகும்.

இனி இந்த பிடிக்காத வேலையை மிக எளிதாக வெறும் ஒரு நிமிடத்தில் செய்யலாம். ஆம் நண்பர்களே அதுவும் நமது வீட்டில் இருக்கும் சில பொருட்கள் போதும். மிக சுலபமாக டாய்லெட்டை சுத்தம் செய்துவிடலாம். சரி வாங்க இதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும், எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்த முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
டீ வடிகட்டி புதுசு போல இருக்கணுமா.! அப்போ இதை செய்யுங்க..

தேவையான பொருட்கள்:

  • முட்டையின் ஓடு – 10
  • தூள் உப்பு – ஒரு ஸ்பூன்
  • பேக்கிங் சோடா – இரண்டு ஸ்பூன்
  • வினிகர் – இரண்டு ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – இரண்டு ஸ்பூன்
  • துணி பவுடர் அல்லது லிக்விட் – இரண்டு ஸ்பூன்

தயார் செய்யும் முறை:

ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் முட்டை ஓடை சேர்த்து சேர்த்து நன்றாக பவுடர் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அதனை ஒரு பவுலில் சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் தூள் உப்பு, பேக்கிங் சோடா இரண்டு ஸ்பூன், வினிகர் இரண்டு ஸ்பூன், எலுமிச்சை சாறு இரண்டு ஸ்பூன் துணி பவுடர் அல்லது லிக்விட் இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளுங்கள்.

இவ்வளவு தான் இந்த லிக்விடை பாத்ரூம் மற்றும் டாயிலெட்டில் எங்கெல்லாம் கறையாக உள்ளதோ அங்கெல்லாம் ஊற்றி நன்றாக தேய்த்து கழுவினால் போதும் பாத்ரூம், கிச்சன் மற்றும் டாய்லெட்டில் உள்ள கறைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இட்லி சாஃப்ட்டாக மல்லிப்பூ போல இருக்க இதை ட்ரை பண்ணுங்க..!

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement