பச்சை மிளகாய்
நமது உணவு தேவைகளில் முக்கியமானது காய்கள். பொதுவாக நாம் ஒரு வாரத்திற்கு தேவையான காய்களை ஒரே வேலையாக வாங்கி நம்முடைய பிரிட்ஜில் அடுக்கி விடுவோம். இப்படி செய்வதால், வேலைகளுக்கு செல்லும் பலருக்கு வேலை மிச்சமாகிறது. கோடைகாலங்களில் இது நல்ல வழி என்றாலும். குளிர்காலத்தில் நம்மால் அதிகப்படியான காய்களை வாங்கி வீட்டில் பத்திரப்படுத்த முடியாது. காரணம் காற்றில் உள்ள ஈரப்பதம். அதனால் காய் மற்றும் கனிகள் கூடிய விரைவில் அழுகிவிடும். இதனால் நம்மால் நமக்கு தேவையான பொருட்களை சேமிக்க முடியாது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வழிதான் என்ன? நமக்கு கிடைக்கும் சிறிது ஓய்வில் நாம் வீட்டிற்கு தேவையான காய் மற்றும் பழங்களை வாங்குகிறோம். ஆனால் அதனை சரியாக பாதுகாக்க நமக்கு தெரிவதில்லை. இன்றைய பதிவில் நமது சமையலுக்கு தேவைப்படும் பச்சை மிளகாய்களை எவ்வாறு நாள்கணக்கில் பாதுகாப்பாக வைப்பது என்று இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Best way to keep CHILLI from rotting in tamil:
சமையலுக்கு வெங்காயம், தக்காளி எவ்வளவு முக்கியமோ அதை போல் மிளகாயும் மிக முக்கியம். காரசாரமான சமையலுக்கு மிளகாய் மிக முக்கியம். நமது வீட்டு சமயலறையில் மிளகாய் வெங்காயம் தக்காளி இருந்தால் போதும் ருசியான சமையலை செய்யலாம். ஆனால் இவை மூன்றின் ஆயுட்காலமும் குறைவுதான். அவற்றை நீண்ட நாட்களுக்கு கெடாமல் பாதுகாக்க நம்மால் முடிந்த முயற்சிகளை எடுப்போம். அந்த வகையில் இன்று பச்சை மிளகாய் கெடாமல் நீண்ட நாட்கள் இருக்க சென்னை செய்ய வேண்டும் என்பது உங்களுக்காக.
Milagai kedamal irukka tips in tamil:
அதிகளவிலான மிளகாயை வாங்கும் போது அதனை குறிப்பிட்ட நாட்களுக்குள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது.
அப்படியே குளிர்சாதனப்பெட்டிகளில் வைத்தாலும் வீணாகிவிடும்.
எனவே முதலில் பச்சை மிளகாயினை சுத்தம் செய்துவிட்டு அதன் காம்பு பகுதிகளை நீக்க வேண்டும். பின்னர் அதனை ஒரு காற்று புகாத ஜாடியில் பேப்பர்களை வைத்து அதன் மேல் மிளகாய்களை வைத்து காற்று புகாத படி மூட வேண்டும்.
இப்படி மூடிய பாத்திரத்தை பிரிட்ஜில் வைத்தால் 20-25 நாள்கள் வரை கூட பச்சை மிளகாய் பசுமையாக அப்படியே இருக்கும்.
பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…
மண்ணே இல்லாமல், 5 நாளில் கொத்தமல்லியை உங்க வீட்டிலேயே வளர்க்கலாம் ..
சமயலறையில் படிந்துள்ள எண்ணெய் கரையை நிமிடத்தில் போக்க என்ன செய்யலாம்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |