மாதவிடாய் சீக்கிரமாக வருவதற்கு சில டிப்ஸ்

Advertisement

மாதவிடாய் பிரச்சனைகள் தீர்வு 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் மாதவிடாய் சீக்கிரமாக வருவதற்கு சில டிப்ஸ் பற்றித் தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். பெரும்பாலும் பெண்களுக்கு அதிகமாக காணப்படும் பிரச்சனைகளில் இதுவும் ஓன்று. மாதவிடாய் சீக்கிரமாக வராமல் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா.? ஏதேனும்  விசேஷங்கள் வந்தால் மாதவிடாயை தள்ளிபோடுவதற்கு மாத்திரை சாப்பிடுவதால் இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. சிலருக்கு தைராய்டு, நீர் கட்டி இருப்பதாலும் மாதவிடாய் சரியான நாட்களில் வராமல் தள்ளி போய்விடுகிறது. பெண்கள் இந்த மாதிரி மாத்திரை போட்டு மாதவிடாய் வரவிப்பதன் மூலம் உடலுக்கு கேடு விளைவிக்கும். இயற்கையாகவே  மாதவிடாய்  சீக்கிரமாக வருவதற்கு சில டிப்ஸ்களை நம் பதிவில் பார்க்கலாம் வாங்க.

மாதவிடாய் குறைவாக வந்தால் இந்த காரணம் தான் தெரியுமா

 

அன்னாசி பழம் நன்மைகள்:

pineapple benefits in tamil

அன்னாசி பழம் இதில்  அதிகமான வெப்பம் உள்ளதால் Period வருதற்கு உதவியாக இருக்கிறது. மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சீக்கிரமாக வருவதற்கு இந்த பழம் உதவியாக இருக்கிறது.

பப்பாளி:

papaya benefits in tamil

மாதவிடாயை சீக்கிரமாக வரவைப்பதற்கு பப்பாளி பழம் ஒரு சிறந்த மருந்தாகும். பப்பாளி உடலில் வெப்பத்தை அதிகம் ஏற்படுத்துவதால் மாதவிடாய் சீக்கிரமாக வருகிறது. இந்த பழத்தில் உள்ள கரோட்டீன் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை  தூண்டுவதன் மூலம் Period வருகிறது. இந்த பழத்தை இரண்டு வேலை தொடர்ந்து சாப்பிட்டால் சீக்கிரமாக Period வந்துவிடும்.

வெல்லம்:

jaggery benefits in tamil

வீட்டில் உபயோகிக்க கூடிய வெல்லம் மாதவிடாய் வருவதற்கு பயனுள்ளதாக இருக்கின்றது. வெல்லத்தில் எள் சேர்த்து காலை நேரத்தில்  சாப்பிடுவதன் மூலம் மாதவிடாய் சுழற்சியை முன்னதாகவே வரவைப்பதற்கு உதவுகிறது. இஞ்சி சாறுடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிடுவதால் மாதவிடாய் சீக்கிரமாக வருவதற்கும் உதவுகிறது.

மாதுளை:

pomegranate benefits in tamil

மாதவிடாய் சுழற்சியை சீக்கிரமாக வரவைப்பதற்கு மாதுளை பழம் உதவுகின்றது. மாதுளை சாற்றை ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்து வந்தால் மாதவிடாய் வந்துவிடும். அதுமட்டுமில்லாமல்  மாதுளையுடன் சரியான அளவு கரும்பு சாற்றை சேர்த்து குடித்து வந்தாலும் மாதவிடாய் சீக்கிரமாக வருவதற்கு உதவியாக இருக்கிறது.

கேரட்:

carrot benefits in tamil

ஒரு கேரட்டுடன் பூசணிபழத்தின் சாற்றை சேர்த்து குடிப்பதால் நல்ல பலன் தருகிறது. அப்படி பூசணிப்பழம் இல்லையென்றால் கேரட் ஜூஸ் மட்டும் ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்து வரலாம். இதில் உள்ள கரோட்டீன் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை தூண்டுவதன் மூலம் மாதவிடாய் சீக்கிரமாக வருகிறது.

எள் விதைகள்:

sesame seeds benefits in tamil

எள் விதைகளை மாதவிடாய் வருவதற்கு 2 நாட்கள் முன்னதாக சாப்பிட்டு வரலாம். எள் விதைகளில் அதிக வெப்பத்தன்மை இருப்பதால் அதிகமாக  எடுத்து கொள்ளவேண்டாம். குறைந்த அளவில் எள் எடுத்து வெந்நீருடன் கலந்து சாப்பிடலாம். அப்படி இல்லையென்றால் ஒரு நாளைக்கு 2 முறை  பச்சையாக சாப்பிடலாம். இப்படி செய்வதன் மூலம் மாதவிடாய் சீக்கிரமாக வந்துவிடும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips

 

Advertisement